மெக்கட்ரானிக்ஸ் என்ற பெயரிலிருந்தே இத்துறையை அறியலாம். மெக்கானிக்கல் இன்ஜினியரிங், எலக்ட் ரானிக் இன்ஜினியரிங், கம்ப்யூட்டர் இன்ஜினியரிங், கன்ட்ரோல் இன்ஜினியரிங், மூலக்கூறு இன்ஜினியரிங் உள்ளிட்ட துறைகளின் மையமாக இருந்து, பயன்படக்கூடிய பொருட்களை உற்பத்தி செய்வது குறித்து படிக்கும் இன்ஜினியரிங் துறை இயந்திர மின்னணுவியல் எனப்படும்.
1969ஆம் ஆண்டு, யஸ்காவா என்ற ஜப்பானிய நிறுவனத்தில் பணிபுரிந்த டெட்சூரோ மோரி என்பவர் மெக்கட்ரானிக்ஸ் துறையை உருவகப்படுத்தினார். பல்வேறு இன்ஜினியரிங் துறைகளின் பங்களிப்பு இத்துறையில் இருப்பது கூடுதல் சிறப்புக்குரியதாகும். நுண்ணிழை ஒளியியலில்(பைபர் ஆப்டிக்ஸ்) ஏற்பட்டுள்ள வளர்ச்சியின் காரணமாக, இத்துறையில் ஆப்டிக்கல் இன்ஜினியரிங்கின் பங்களிப்பு தவிர்க்க இயலாத ஒன்றாகும்.
தொழில் சம்பந்தமான இயந்திரமனிதன்(ரோபோ) உருவாக்குதல், இரண்டு மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் தயாரிப்பு, ஆற்றலை உண்டாக்கும் உள் எரி பொறிகள், சக்கரங்கள் தயாரிப்பு போன்ற துறைகளில் எந்திர மின்னணுவியல் முன்னிலையில் உள்ளது. தற்போது வெளிநாடுகளில் ரேடார் நுண்ணலை கருவிகள், லேசர் ஒளிஅலைக் கருவிகள் போன்ற பல்வேறு புதிய அம்சங்களுடன் தயாராகும் கார்களில் இத்துறையின் வேலைப்பாடு அதிகம்.
நுண்கணினியியல்(சைபர்நெடிக்ஸ்) துறையானது கன்ட்ரோல் இன்ஜினியரிங் துறையுடன் இணைந்துள்ளது. நவீன காலத்தில் உற்பத்தியில் பயன்படும் உபகரணங்கள் இயந்திர மின்னணுவியலின் அளவைகளுடன் இணைந்து அதன் கட்டமைப்பை பொறுத்து முழுமை அடைகின்றன. ஹையரார்க்கி (ஏடிஞுணூச்ணூஞிடதூ), பாலிஆர்க்கி (கணிடூதூச்ணூஞிடதூ), ஹெட்ராஆர்க்கி (ஏஞுtஞுணூச்ணூஞிடதூ) மற்றும் கலப்பின (ஏதூஞணூடிஞீ) கட்டமைப்புகள் மிகவும் பிரபலமானவை. கார்களில் பயன்படும்.
ஆன்டிலாக் பிரேக் சிஸ்டம் மற்றும் அன்றாடம் பயன்படும் பொருட்களான தானியங்கி கேமரா, வீடியோ கேமரா, கம்ப்யூட்டர் ஹார்டுவேர் மற்றும் சிடி பிளேயர்கள் போன்றவற்றில் மேற்கூறிய கட்டமைப்புகள் பெரிதும் உதவுகின்றன.
பயிலும் நிறுவனங்கள் * எஸ்.ஆர்.எம்., பல்கலைக்கழகம், காட்டான்குளத்தூர் (தீதீதீ.ண்ணூட்தணடிதி.ச்ஞி.டிண) * கொங்கு இன்ஜினியரிங் கல்லூரி, ஈரோடு (தீதீதீ.டுணிணஞ்த.ச்ஞி.டிண) * குமரகுரு தொழில்நுட்பக் கல்லூரி, கோவை (தீதீதீ.டுஞிt.ச்ஞி.டிண) * ஸ்ரீகிருஷ்ணா இன்ஜினியரிங் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி, கோவை (தீதீதீ.ண்டுஞிஞுt.ச்ஞி.டிண) * கே.எஸ்.ஆர் தொழில்நுட்பக் கல்லூரி, திருச்செங்கோடு (தீதீதீ.டுண்ணூஞிt.ச்ஞி.டிண) * மஹாராஜா இன்ஜினியரிங் கல்லூரி, கோவை (தீதீதீ.ட்ச்டச்ணூச்டீச்.டிண) * அறுபடைவீடு தொழில்நுட்பக் கல்வி நிறுவனம், சென்னை (தீதீதீ.ச்திடிt.ச்ஞி.டிண) வி.எம்.கே.வி.இன்ஜினியரிங் கல்லூரி, சேலம் (தீதீதீ.திட்டுதிஞுஞி.ச்ஞி.டிண)
வேலைவாய்ப்பு இத்துறையில் பட்டப்படிப்பை முடித்தவர்கள் இத்துறை மட்டுமல்லாமல், மெக்கானிக்கல், எலக்ட்ரானிக்ஸ், கம்ப்யூட்டர் என சகல துறைகளிலும் போதிய அறிவு பெற்றிருப்பார்கள். எனவே இவர்களுக்கான வேலைவாய்ப்புகள் பரந்து காணப்படுகின்றன.
ஆட்டோமொபைல், தொழில் நிறுவனங்கள், எண்ணெய் மற்றும் வாயு நிறுவனங்கள், சுரங்கத் தொழிற்சாலை, போக்குவரத்து, பாதுகாப்பு, ரோபோ தயாரிப்பு நிறுவனங்கள், ஏரோ ஸ்பேஸ், விமானம் கட்டுமான தொழிற்சாலை உள்ளிட்ட பல இடங்களில் வேலைவாய்ப்புகள் குவிந்துள்ளன.
வளர்ந்து வரும் துறை என்பதால் ஊதியம் நிறுவனத்தையும், அனுபவத்தையும் பொறுத்தே அமையும். இத்துறையில் மேற்படிப்பு முடித்தவர்களுக்கு வெளிநாடுகளில் உள்ள கார் மற்றும் ரோபோ தயாரிப்பு நிறுவனங்கள், சிடி தயாரிப்பு நிறுவனங்கள் போன்றவற்றில் பணியில் அமரலாம்.