முதல்பக்கம் » பாடப்பிரிவுகள்

     
  • - சிவில் இன்ஜினீயரிங் (CE)
  • - எலக்ட்ரிக்கல் மற்றும் எலக்ரானிக்ஸ் துறை
  • - பி.டெக்., பாலிமர் இன்ஜினீயரிங் (PL)
  • மெட்டீரியல் துறையில் வெகுவேகமாக வளர்ந்து வரும் பொருட்களில் ஒன்று பாலிமர் இன்ஜினீயரிங் துறையாகும்.

    வேகமாக அதிகரிக்கும் பாலிமரின் உற்பத்திக்கேற்ப இத்துறையில் பணி புரிபவர்களின் எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
    அமெரிக்காவிலுள்ள மொத்த கெமிக்கல் இன்ஜினீயர்கள் மற்றும் கெமிஸ்டுகளில் 50 சதவீதம் பேர் பாலிமர் துறையில் பணி புரிவதாக தகவல்கள் கூறுகின்றன. இந்தியாவிலும் புதிய புதிய பாலிமர் தொழிற்சாலைகள் துவங்கப்பட்டு வருவதால், இத்துறையில் இன்ஜினீயரிங் படிப்பவரின் எண்ணிக்கையும் சமீப காலமாக அதிகரித்துக் கொண்டே வருகிறது.

    பாலிமர்களை உற்பத்தி செய்வது மற்றும் பயன்படுத்துவது ஆகியவற்றில் கெமிக்கல் இன்ஜினீயரிங்கின் கோட்பாடுகளையும் விதிகளையும் பாலிமர் இஞ்ஜினீயர்கள் பயன்படுத்துகிறார்கள். இதற்காக பிளான்ட் டிசைன், பிராசஸ் டிசைன், தெர்மோடைனமிக்ஸ், போக்குவரத்து அம் சங்கள் ஆகிய தத்துவங்களை பாலிமர் இன்ஜினீயர்கள் ஆராய்கிறார்கள். பிளாஸ்டிக் மற்றும் பாலிமர் உற்பத்தியை இவர்கள் கண்காணிக்கிறார்கள். உற்பத்தித் தளத்தில் பிளாஸ்டிக் மோல்டர்களையும் டெக்னீஷியன்களையும் கண்காணிப்பவர்களும் இவர்களே.

    படிப்புகள் மற்றும் தகுதிகள்:
    இத்துறையில் இளநிலை மற்றும் முதுநிலை என இரு பிரிவுகளிலுமே பல்வேறு படிப்புகள் உள்ளன. இளநிலையில் பி.இ., பி.டெக். மற்றும் முதுநிலையில் எம்.டெக். என்றும் படிப்புகள் உள்ளன.

    பிளஸ் 2ல் இயற்பியல், வேதியியல், கணிதம் படித்தவர்கள் பாலிமர் இன்ஜினீயரிங்கில் பி.இ., பி.டெக். படிப்பில் சேரலாம். பாலிமர் இன்ஜினீயரிங் மற்றும் பிளாஸ்டிக் இன்ஜினீயரிங் என இந்தப் படிப்புகள் பெயரிடப்பட்டுள்ளன. இதைப் படித்தவர்கள் பாலிமர் உற்பத்தித் தளங்களிலும் ஆய்வுக் கூடங்களிலும் நேரடியாகப் பணி புரியலாம். இந்தப் படிப்புகளில் சேர மாநில மற்றும் தேசிய அளவில் நடத்தப்படும் நுழைவுத் தேர்வுகளை எழுதி அவற்றில் வெற்றி பெற வேண்டும்.

    எம்.டெக்கில் பாலிமர் இன்ஜினீயரிங் பிளாஸ்டிக் டெக்னாலஜி படிப்பதற்கு பாலிமர் இன்ஜினீயரிங் அல்லது பிளாஸ்டிக் டெக்னாலஜி அல்லது ரப்பர் டெக்னாலஜி அல்லது மெக்கானிக்கல் இன்ஜினீயரிங்கில் பி.இ., பி.டெக். படித்திருக்க வேண்டும். இயற்பியல் அல்லது வேதியியலில் எம்.எஸ்சி. படித்தவர்களும் இதற்கு விண்ணப்பிக்கலாம். இத்துறையில் மிகச் சிறந்த கல்வி நிறுவனங்கள் கேட் தேர்வில் தகுதி பெற்றவருக்கு கல்வி வாய்ப்பைத் தருகின்றன.

    வாய்ப்புகள் மற்றும் மேம்பாடு :
    இத்துறையில் படிப்பை முடிப்பவருக்கு பாலிமர் உற்பத்தி மற்றும் உபயோகிக்கும் தொழிற்சாலைகளில் புரடக்ஷன் சூப்பர்வைசர், குவாலிடி கன்ட்ரோல் இன்ஸ் பெக்டர், புரடக்ஷன் பிளானர், மோல்ட் டிசைனர் என்னும் பல பணிகள் கிடைக்கின்றன.

    இவர்களுக்கு பொதுத் துறை மற்றும் தனியார் பிளாஸ்டிக் நிறுவனங்களிலும் நல்ல வேலைகள் கிடைக்கின்றன. உற்பத்தித் தொழில் நிறுவனங்களான பிளாஸ்டிக், ஆட்டோமோடிவ், எலக்ட்ரானிக்ஸ், ஏரோஸ்பேஸ், பவர் டிரான்ஸ்மிஷன் நிறுவனங்களிலும் நல்ல பணி வாய்ப்புகள் கிடைக்கின்றன.

    பாலிமர் இன்ஜினீயர்கள், பாலிமர் டெக்னாலஜிஸ்டுகள், பாலிமர் சயின்டிஸ்டுகளுக்கு மத்திய அரசின் பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகம், ஓ.என்.ஜி.சி., ஆயில் இந்தியா ஆய்வகம், பெட்ரோ கெமிக்கல் இன்ஜினீயரிங் பிளான்டுகள், வெவ்வேறு மாநிலங்களிலுள்ள இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் பெட்ரோலியம், பாலிமர் கழகங்கள், பெட்ரோலியம் கன்சர்வேஷன் ரிசர்ச் அசோசியேஷன் ஆப் இந்தியா, பெட்ரோ பைல்ஸ் கோவாபரேடிவ் லிமிடட் போன்ற அரசுத் துறை நிறுவனங்களில் வேலை கிடைக்கிறது.

    இயற்கை வளங்கள் குறைவாகிக் கொண்டே வரும் இந்த நாட்களில் மாற்று உபயோகப் பொருளான பாலிமரின் முக்கியத்துவத்தைக் கருத்தில் கொண்டு இந்தியாவில் பாலிமர் மற்றும் பெட்ரோ கெமிக்கல் துறை அதிக முக்கியத்துவம் வாய்ந்த துறைகளாக அறிவிக்கப்பட்டுள்ளது.

    இத்துறைக்கு வளமான எதிர்காலம் உள்ளது. உலகத்தில் மொத்த பாலிமர் உபயோகத்தை ஒப்பிடும் போது, இந்தியாவில் குறைந்த அளவே பாலிமர் தற்போது பயன்படுகிறது. உலகச் சந்தையின் போட்டி மற்றும் வாழ்க்கைத் தர மேம்பாடு குறித்த தொடர் முயற்சிகளின் காரணமாக பிளாஸ்டிக் மற்றும் பாலிமர் துறையில் முன்னேற்றம் என்பது தவிர்க்க முடியாதாக மாறி வருகிறது.

    பாலிமர் துறை கல்வி நிறுவனங்கள்:
    பாலிமர் இன்ஜினீயரிங் படிப்பானது கடந்த சில ஆண்டுகளாக புதிது புதிதாக பல கல்வி நிறுவனங்களில் துவங்கப்பட்டுள்ளது. ஐ.ஐ.டிக்கள், என். ஐ.டிக்கள், மெஸ்ராவிலுள்ள பிட்ஸ், கொச்சின் அறிவியல் தொழில்நுட்ப் பல்கலைக்கழகம், மகாராஷ்டிரா இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி, புனே, லங்கோவால் இன்ஸ்டிடியூட் ஆப் இன்ஜினீயரிங் அண்ட் டெக்னாலஜி, பஞ்சாப், ஸ்ரீஜெயச்சாமராஜேந்திர காலேஜ் ஆப் இஞ்ஜினீயரிங், மைசூரு, யுனிவர்சிடி காலேஜ் ஆப் இஞ்ஜினீயரிங், தொடுபுழா போன்றவற்றில் இத்துறைப் படிப்புகள் நடத்தப்படுகின்றன. தமிழ்நாட்டில் சமீப காலமாக ஒரு சில கல்லூரிகளில் இப்படிப்பு அறிமுகப்படுத்தப்பட்டு வருகிறது.
  • - மெக்கட்ரானிக்ஸ்
  • - ஜியோ இன்பர்மேடிக்ஸ் (GI)
  • - பி.டெக்., பெட்ரோலியம் இன்ஜினியரிங் (PE)
  • - பி.டெக்., எலக்ட்ரிகல் இன்ஜினியரிங்
  • - பி.டெக்., பயர் இன்ஜினியரிங்
  • - ஆடியோ இன்ஜினியரிங்
  • - பி.டெக்., கம்ப்யூட்டர் சயின்ஸ் மற்றும் இன்ஜினீயரிங் (CS)
  • - கம்ப்யூட்டர் சயின்ஸ் மற்றும் இன்ஜினீயரிங் (CS) (ss)
  • - எலக்ட்ரிகல் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் இன்ஜினீயரிங் (EY)
  • - எலக்ட்ரிகல் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் (ES) (sandwich) (SS)
  • - எலக்ட்ரானிக்ஸ் மற்றும் கம்யூனிகேஷன்ஸ் இன்ஜினீயரிங் (EM) (SS)
  • - எலக்ட்ரானிக்ஸ் மற்றும் இன்ஸ்ட்ரூமென்டேஷன் இன்ஜினீயரிங் (EI)
  • - என்விரான்மென்டல் இன்ஜினீயரிங் (EN)
  • - பி.டெக்., இண்டஸ்ட்ரியல் பயோடெக்னாலஜி (IB)
  • - பி.டெக்., இண்டஸ்ட்ரியல் பயோடெக்னாலஜி (IS) (SS)
  • - இண்டஸ்ட்ரியல் இன்ஜினீயரிங் (IE)
  • - இன்பர்மேஷன் டெக்னாலஜி (IT)
1 of 4 Pages
« First « Previous 1 2 3 4
Search this Site

மேலும்

Copyright © 2022 www.kalvimalar.com.Designed and Hosted by Dinamalar|Contact us