விவசாய கல்லூரிகளில் உள்ள படிப்புகளில் சேர கல்வித் தகுதி

எழுத்தின் அளவு :

Print

தமிழக விவசாய பல்கலைக்கழகத்தின் கீழ் உள்ள கல்லூரிகளில்  இடம்பெற்றுள்ள இளநிலைப் பட்டபடிப்புகளும் அவற்றில் சேர்வதற்கான கல்வித் தகுதிகளும்:

1.பி.எஸ்சி.,  விவசாயம்
2.பி.எஸ்சி.,  தோட்டக்கலை
3.பி.எஸ்சி.,  வனவியல்
4.பி.எஸ்சி.,  ஹோம் சயின்ஸ்
5.பி.டெக்,  விவசாய இன்ஜினியரிங்
6.பி.டெக்,  புட் பிராசசிங் இன்ஜினியரிங்
7.பி.டெக்.,  பயோ டெக்னாலஜி
8.பி.டெக்,  தோட்டக்கலை
9.பி.டெக்,  ஆற்றல் மற்றும் சுற்றுச்சூழல் இன்ஜினியரிங்
10.பி.எஸ்.,  அக்ரிபிசினஸ் மேலாண்மை
11.பி.டெக்.,  விவசாய தகவல் தொழில்நுட்பம்

இப்படிப்புகளில் சேர...
பிளஸ் 2வில் கீழ்க்கண்ட பாடங்களை படித்திருக்க வேண்டும்.

1.கணிதம் அல்லது தாவரவியல் அல்லது உயிரியல் ஆகியவற்றை முதல் பாடமாக படித்திருக்க வேண்டும்.


2.இயற்பியலை இரண்டாவது பாடமாக படித்திருக்க வேண்டும்.


3.வேதியலை மூன்றாம் பாடமாக படித்திருக்க வேண்டும்.


4.ஏதாவது ஒரு விருப்பப்பாடத்தை தேர்வு செய்து படித்திருக்க வேண்டும்.

  • கணிதம், இயற்பியல், வேதியியல் ஆகிய பாடப்பிரிவுகளை எடுத்துப்படித்த மாணவர்கள் நான்காவது பாடமாக, உயிரியல் அல்லது கம்ப்யூட்டர் சயின்ஸ் அல்லது புள்ளியியல் அல்லது பயோ கெமிஸ்ட்ரி அல்லது ஹோம் சயின்ஸ் எடுத்துப்படித்திருக்கவேண்டும்.

  • தாவரவியல், இயற்பியல், வேதியல் ஆகிய பாடப்பிரிவுகளை எடுத்துப்படித்த மாணவர்கள் நான்காவது பாடமாக, விலங்கியலை எடுத்துப் படித்திருக்க வேண்டும்.

  • உயிரியல், இயற்பியல், வேதியல் ஆகிய பாடப்பிரிவுகளை எடுத்துப்படித்த மாணவர்கள், நான்காவது பாடமாக, கம்ப்யூட்டர் சயின்ஸ், மைக்ரோபயாலஜி, பயோடெக்னாலஜி, பயோகெமிஸ்ட்ரி, நர்சிங், நியூட்ரிஷனல் டயடிக்ஸ் போன்ற பாடங்களை படித்திருக்க வேண்டும்.

  • பொதுப்பிரிவினர், பிற்பட்டோர், பிற்பட்டோர் (கிறிஸ்தவர்கள்), பிற்பட்டோர் (முஸ்லிம்கள்)  நான்கு தகுதி பாடங்களில் 60 சதவீதத்துக்கும் குறையாமல் மதிப்பெண் எடுத்திருக்க வேண்டும்.

  • மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர்  நான்கு தகுதி பாடங்களில் 55 சதவீதத்துக்கும் குறையாமல் மதிப்பெண் எடுத்திருக்க வேண்டும்.

  • ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர்  நான்கு பாடங்களிலும் தேர்ச்சி பெற்றிருந்தால் போதுமானது.  

Search this Site
dinamalar-advertisement-tariff-2021

மேலும்

Copyright © 2021 www.kalvimalar.com.All rights reserved | Contact us