எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ்., படிப்புகளில் சேர தகுதி மதிப்பெண்கள்

எழுத்தின் அளவு :

Print

இயற்பியல், வேதியல், தாவரவியல் மற்றும் விலங்கியல் பாடங்களோ அல்லது இயற்பியல், வேதியல், உயிரியல் மற்றும் ஏதாவது பாடங்களோ படித்திருக்க வேண்டும். ஒரே முறை தேர்வு எழுதி இப்பாடங்களில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 

பொதுப்பிரிவினர்:

1.உயிரியலில் 60 சதவீத மதிப்பெண் அல்லது தாவரவியல் மற்றும் விலங்கியலில் இணைந்து 60 சதவீத மதிப்பெண்கள்.


2.இயற்பியல் மற்றும் வேதியியலில் தலா 60 சதவீத மதிப்பெண் எடுத்திருக்க வேண்டும்.


3. இப்பாடங்களின் ஒட்டுமொத்த சராசரி (அக்ரிகேட்) 200க்கு 140 மதிப்பெண்கள் இருக்க வேண்டும்.

பிற்பட்டோர், பிற்பட்டோர் (கிறிஸ்தவர்), பிற்பட்டோர் (முஸ்லிம்கள்):

1.உயிரியலில் 60 சதவீத மதிப்பெண் அல்லது தாவரவியல் மற்றும் விலங்கியலில் இணைந்து 60 சதவீத மதிப்பெண்கள்.

 

2.இயற்பியல் மற்றும் வேதியியலில் தலா 60 சதவீத மதிப்பெண் எடுத்திருக்க வேண்டும்.


3. இப்பாடங்களின் ஒட்டுமொத்த சராசரி (அக்ரிகேட்) 200க்கு 130 மதிப்பெண்கள் இருக்க வேண்டும்

மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர்:

1.உயிரியலில் 55 சதவீத மதிப்பெண் அல்லது தாவரவியல் மற்றும் விலங்கியலில் இணைந்து 55 சதவீத மதிப்பெண்கள்.


2.இயற்பியல் மற்றும் வேதியியலில் தலா 55 சதவீத மதிப்பெண் எடுத்திருக்க வேண்டும்.


3. இப்பாடங்களின் ஒட்டுமொத்த சராசரி (அக்ரிகேட்) 200க்கு 120 மதிப்பெண்கள் இருக்க வேண்டும்

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர்:

1.உயிரியலில் 40 சதவீத மதிப்பெண் அல்லது தாவரவியல் மற்றும் விலங்கியலில் இணைந்து 40 சதவீத மதிப்பெண்கள்.


2.இயற்பியல் மற்றும் வேதியியலில் தலா 40 சதவீத மதிப்பெண் எடுத்திருக்க வேண்டும்.


3. இப்பாடங்களின் ஒட்டுமொத்த சராசரி (அக்ரிகேட்) 200க்கு 80 மதிப்பெண்கள் இருக்க வேண்டும். மதிப்பெண்களை உயர்த்துவற்காக மறுதேர்வு (இம்ப்ரூவ்மென்ட் தேர்வு) எழுதியிருந்தாலும் முதல் முறை பெற்ற மதிப்பெண்களே கணக்கில் கொள்ளப்படும். இம்ப்ரூவ்மென்ட் மதிப்பெண்கள் கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட மாட்டாது. தொழிற்பயிற்சி கல்வி படிப்பு (வொகேஷனல் படிப்பு) முடித்த மாணவர்கள்  மருத்துவம் மற்றும் பல் மருத்துவ படிப்புகளுக்கு விண்ணப்பிக்க இயலாது.

Search this Site
dinamalar-advertisement-tariff-2018

Copyright © 2020 www.kalvimalar.com.All rights reserved | Contact us