கல்வி உரிமை சட்டம், பிரிவு 2(n) கீழ் அனைத்து பள்ளிகளில், ஆசிரியர் பணியில் சேருவதற்கு ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெறுதல் என்பது முக்கியமான தகுதிகளில் ஒன்று என்பது நீங்கள் அறிந்ததே.

தமிழ் நாடு ஆசிரியர் தகுதித்தேர்வில் பங்கேற்பதற்கு உதவியாக தினமலர், கல்விமலர் மற்றும் எவரோன் இணைந்து இலவச ஆன்லைன் மாதிரி தேர்வு மே 18 முதல் மே 20 வரை நடத்துகிறது. இந்த இலவச தேர்வானது, தேர்வு எழுதும் தேர்வாளர்களின் தேவையை கருத்தில்கொண்டு நடத்தப்படுகிறது.

இந்த மாதிரி தேர்வானது இரண்டு வினாத்தாள்கள் கொண்டது: Paper I, Paper II (கணிதம் மற்றும் அறிவியல்) & Paper II (சமூக அறிவியல்). மேலும் மொழி தாளானது தமிழில் மட்டுமே கேட்கப்பட்டுள்ளது. இந்த தேர்வு பயிற்சியானது உங்களின் அறிவு திறனையும் மற்றும் தாங்கள் மேம்படுத்திக்கொள்ளவேண்டிய பகுதிகளையும் அறிந்துகொள்ள உதவும். இந்த தேர்வின் முடிவுகள், மற்றும் அதன் அடிப்படையில் பகுப்பாய்வு செய்து தாங்கள் மேம்படுத்திக்கொள்ளவேண்டிய பகுதிகளையும் தெரிவிப்பதன்முலம் TNTET தேர்வை எளிதாக அணுக உதவும்.

இந்த தேர்வின் முடிவுகள் SMS மற்றும் EMAIL மூலமாகவும் அறிந்து கொள்ளலாம். தாங்கள் இந்த இலவச தேர்வினை தங்களது இல்லத்திலிருந்தும் இணையதள மையங்கள் (browsing centre) மூலமாகவும் எடுத்து கொள்ளலாம்.

தாங்கள் இந்த இலவச மாதிரி தேர்வை கீழ்கண்ட இடங்களில் எடுத்து கொள்ளலாம்:

மாதிரி தேர்வு மையங்கள்

மேலும் விவரங்கள் அறிய மற்றும் உதவி பெற 9445079946 / 72 அணுகலாம்.வெற்றிபெற வாழ்த்துக்கள் !