எழுத்தின் அளவு :

Print
Email

நோக்கம்:
கல்வி ரீதியான பரிமாற்றம் மற்றும் ஒத்துழைப்பு மூலமாக, இந்தியர்கள் மற்றும் கனடா நாட்டவர்கள் இடையேயான அறிவு மற்றும் புரிந்துணர்வை அதிகரித்தல்.
 
திட்டம்:
துறை ரீதியான ஆராய்ச்சி /மேம்பாடு மற்றும் டாக்டர் பட்ட ஆராய்ச்சி
 
பிரிவு /பாடம்:
மனித சமுதாயம், சமூக அறிவியல்கள், மேலாண்மை, சட்டம், உடல் நலம், சுற்றுச் சூழல் ஆய்வுகள், அறிவியல் மற்றும் தொழில்நுட்பம், கனடா நாட்டவர்கள் தொடர்பான ஆய்வுகள்.

தகுதி அளவு

துணை ரீதியான ஆராய்ச்சி /மேம்பாடு: இந்தியாவில் ஏதாவது ஒரு ஆராய்ச்சி நிறுவனத்தில் , கொள்கையை உருவாக்கும் நிறுவனத்தில் முழு நேர ஊழியராக பணியாற்ற வேண்டும்.

டாக்டர் பட்டம்

  • பி.எச்டி., பட்டம் பெற அங்கீகரிக்கப்பட்ட ஒரு நிறுவனத்தில் உறுப்பினராக சேர்ந்திருக்க வேண்டும்.
  • பி.எச்டி., பட்டத்திற்கான கட்டுரை அல்லாத இதர பணிகளை முடித்திருக்க வேண்டும்.
  • இது தவிர அனைத்து விண்ணப்பதாரர்களும், இந்தியாவின் நிரந்தர குடிமகன்களாக இருக்க வேண்டும். உதவித் தொகை பெறப்போகும் காலத்தில் அமல்படுத்த உள்ள பணிகள் பற்றிய விரிவான விபரங்களை கொண்டிருக்க வேண்டும். ஆங்கிலம் மற்றும் பிரெஞ்ச் மொழியில் புலமை பெற்றிருக்க வேண்டும்.
விண்ணப்ப நடைமுறைகள்:
தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி என குறிப்பிடப்பட்டுள்ள முகவரியில் இருந்து விண்ணப்ப படிவங்களை பெற்றுக் கொள்ள வேண்டும்.
 
அறிவிக்கப்படும் தேதி மற்றும் காலக்கெடு:
ஒவ்வொருஆண்டும் செப்டம்பர் / அக்டோபர் மாதங்களில் அறிவிக்கப்படும். வெளியிடப்படும் விளம்பரத்தில் கடைசி தேதி குறிப்பிடப்பட்டிருக்கும்.

Scholarship :  சாஸ்திரி இந்தோ - கனடா உதவித்தொகை
Course : 
Provider Address :  vice president, Shastri Indo - Canadian Institute, 5, Bhai vir singh marg, New delhi - 110001. Tel: 011 -23732677, 23346906 Fax: 011 - 23746416 www.sici.org
Description :   
Search this Site

Copyright © 2018 www.kalvimalar.com.All rights reserved | Contact us