மாநில அளவிலான +2 படிக்கும் மாணவர்களுக்கான
குறும்படத் தயாரிப்பு இலவசப் பயிற்சி முகாம்
பயிற்சி முகாம் நடைபெற்ற நாட்கள்: ஏப்ரல்1-5,2013.

”மாணவ இயக்குனர் 2013“ ”மாணவ இயக்குனர் 2013” எனும் ஐந்து நாட்கள் கொண்ட குறும்படத் தயாரிப்பு இலவசப் பயிற்சி முகாமினை தினமலர் நாளிதழ் மற்றும் மதுரை சுப்பலட்சுமி லட்சுமிபதி அறிவியல் கல்லூரியின் திரைப்படம் மற்றும் தொலைக்காட்சித் துறை இணைந்து இரண்டாவது முறையாக நடத்தியது.

இந்த முகாமிற்கு தமிழக மாநிலம் முழுவதுமிருந்தும் இருநூறு மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர். இந்த பயிற்சி முகாம் 1.4.2013 அன்று தொடங்கி 5.4.2013 அன்று நிறைவு பெற்றது.

தினமலர் வெளியீட்டாளரும் மற்றும் சுப்பலட்சுமி லட்சுமிபதி அறிவியல் கல்லூரியின் தலைவருமான டாக்டர், R.லட்சுமிபதி அவர்கள் பயிற்சி முகாமினை தலைமை தாங்கி துவக்கி வைத்தார்.

கல்லூரியின் விரிவுரையாளர்கள் S.வளர்மதி, M. ரகு காளிதாசன் மற்றும் இயக்குனர்கள் V.M.ரமேஷ், S.P.சுப்புராமன், K.சக்திவேல், N.மணிகண்டன், K.G.வெங்கடேஷ் ஆகியோர்கள் பங்குபெற்ற மாணவர்களுக்கு திரைக்கதை எழுதுதல், இயக்கம், ஒளிப்பதிவு, படத்தொகுப்பு, ஒலிப்பதிவு ஆகிய பயிற்சிகளை வழங்கினர்.

இப்பயிற்சி முகாமில் மாணவர்களுக்கான கல்விக்கடன் பெறும் முறைகள் குறித்து பாரத மாநில வங்கி (SBI), மதுரையின் தலைமை மேலாளர் திரு A.K. சாரதி மற்றும் ஃபெடரல் பேங்க் ஆஃப் இந்தியா, மதுரையின் மேலாளர் திரு. S. ராஜா ஆகியோர் விளக்கினர்

பங்கேற்ற மாணவர்கள் முள் கிரீடம், பூ வேலி, பிளாக் ஷீப், வசூல் ராஜா, வேர், காமெடி ஆப் எரர் என்ற பெயர்களில் ஆறு குறும்படங்களை தயாரித்தனர். இப்படங்களில் பொழுது போக்கு மற்றும் சமூக சிந்தனையுடன் கூடிய கருத்துக்கள் அமைந்துள்ளது சிறப்பம்சம். இப்படங்கள் அனைத்தும் பயிற்சி முகாமின் நிறைவு நாளன்று பெற்றோர்கள் முன்னிலையில் திரையிட்டு காண்பிக்கப்பட்டன.

சுப்பலட்சுமி லட்சுமிபதி அறிவியல் கல்லூரியின் நிர்வாக மேலாண்மையர் திரு. R. ராம்குமார், முதல்வர் டாக்டர் A.பத்மனாபன், ஆலோசகர் G.R. பாலகிருஷ்ணன், தேர்வாணையர் டாக்டர் P.புதியநாயகம் மற்றும் திரைப்படத் துறையின் ஒருங்கிணைப்பாளர் திரு C.மணிகண்டன் ஆகியோர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர். பயிற்சி முகாமில் பங்கேற்ற அனைத்து மாணவர்களுக்கும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

Search this Site
dinamalar advertisement tariff

Copyright © 2024 www.kalvimalar.com.All rights reserved | Contact us