
”மாணவ இயக்குனர் 2012“ ஏப்ரல் 23,2012 அன்று காலை 10.00 மணிக்கு சுப்பலட்சுமி லட்சுமிபதி அறிவியல் கல்லூரி, மதுரையில் இனிதே துவங்கியது. தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து 60 மாணவர்களும் அவர்களது பெற்றோர்களூம் இந்த துவக்க விழாவில் கலந்து கொண்டனர்.
துவக்கவிழாவிற்கு டாக்டர் R.லட்சுமிபதி, வெளியீட்டாளர், தினமலர் மற்றும் தலைவர், சுப்பலட்சுமி லட்சுமிபதி அறிவியல் கல்லூரி. அவர்கள் தலைமை தாங்கி சிறப்புரை ஆற்றினார். திரு.பா.கைலாசம், தலைமை ஆக்கம் - புதிய தலைமுறைத் தொலைக்காட்சி, சென்னை. அவர்கள் பயிற்சி முகாமை துவக்கிவத்து சிறப்புரை ஆற்றினார்.
டாக்டர் L.ராமசுப்பு இணை வெளியீட்டாளர், தினமலர் மற்றும் செயலாளர், சுப்பலட்சுமி லட்சுமிபதி அறிவியல் கல்லூரி அவர்கள் சிறப்புரை ஆற்றினார்.
டாக்டர் ரெ.சீனிவாசன் முதல்வர்,சுப்பலட்சுமி லட்சுமிபதி அறிவியல் கல்லூரி அவர்கள் கல்லூரி குறித்த அறிமுகம் செய்தார்.
டாக்டர் சு.சண்முகம் முதல்வர் பொறுப்பு,சுப்பலட்சுமி லட்சுமிபதி அறிவியல் கல்லூரி அவர்கள் மாணவ இயக்குனர் பயிற்சி முகாம் குறித்து விளக்கினார்
சுப்பலட்சுமி லட்சுமிபதி அறிவியல் கல்லூரி ஊடகவியல் துறையின் தயாரிப்பில் C.மணிகண்டன் இயக்கத்தில் வெளியான கற்கை நன்றே எனும் சிறப்பு குறும்படம் திரையிடப்பட்டது.
துவக்க விழா நிகழ்ச்சியினை தமிழ் பேராசிரியர் P. செந்தில் குமரன் தொகுத்து வழங்கினார். ஒருங்கிணைப்பாளர், C. மணிகண்டன் வரவேற்புரையும், திருமதி அமுதா, வணிகவியல் துறைத்தலைவர் அவர்கள் நன்றியுரையும் வழங்கினார்.
துவக்கவிழாவினை தொடர்ந்து திரைப்பட இயக்குனர்கள், பேராசிரியர்கள், தொழில் நுட்ப வல்லுணர்கள் பங்குபெற்ற 60 மாணவர்களுக்கு இயக்கம், ஓளிப்பதிவு, ஒலிப்பதிவு, படத்தொகுப்பு ஆகிய துறைகளில் பயிற்சியளித்தனர்.
ஆறு நாட்கள் நடை பெற்ற இப்பயிற்சி முகாமில் டைம், லைப் டைம், வெளிச்சம், சுமை தாங்கிகள் ஆகிய நான்கு சமூக சிந்தனையுடன் கூடிய குறும்படங்கள் மாணவ இயக்குனர்களால் தயாரிக்கப்பட்டன.
ஏப்ரல் 28, 2012 மாலை 3.30 மணி அளவில் நடைபெற்ற நிறைவுநாள் நிகழ்ச்சியில் சுப்பலட்சுமி லட்சுமிபதி அறிவியல் கல்லூரியின் முதல்வர் Dr. R.சீனிவாசன், ஆலோசகர் G.R. பாலகிருஷ்ணன், தேர்வானையர் Dr. புதிய நாயகம் அவர்கள் பங்கு பெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கி பாராட்டினர்.