போட்டித் தேர்வு இல்லாமல் வங்கிகளில் வேலையில் சேர முடியுமா? | Kalvimalar - News

போட்டித் தேர்வு இல்லாமல் வங்கிகளில் வேலையில் சேர முடியுமா? ஜூலை 31,2010,00:00 IST

எழுத்தின் அளவு :

தனியாரை வங்கித் துறையில் அனுமதித்த பின் போட்டித் தேர்வு இல்லாமல் பிற முறைகளில் திறன்களை அறிந்து கொண்டு தற்போது பல வங்கிகள் இது போன்ற வாய்ப்புகளைத் தருகின்றன. திறமையுடையவர்களை பணிக்கு எடுத்துக் கொள்வதில் நிலவும் கடுமையான போட்டியே இதற்குக் காரணம்.

போட்டித் தேர்வு இல்லையே தவிர, நமது திறன்கள் பரிசோதிக்கப்படுவதற்கான முறைகள் இருக்கத்தான் செய்கின்றன. கணிதத் திறன், ரீசனிங் திறன், தகவல் தொடர்புத் திறன் மற்றும் கம்ப்யூட்டர் திறன் ஆகியவற்றை வங்கிகள் பிற எளிதான முறைகளில் அறிந்து கொள்கின்றன. எனவே ஓரளவு இதற்காகத் தயாராவது மிக முக்கியம். குறிப்பாக கம்ப்யூட்டர் திறனும் ஆங்கில தகவல் தொடர்புத் திறனும் சிறப்பாகப் பெற்றிருப்பவருக்கு வங்கிப்பணி வாய்ப்பு இன்று கடினமானதாக இருக்கவில்லை.

Search this Site

மேலும்

Copyright © 2013 www.kalvimalar.com.All rights reserved | Contact us