பேஷன் டெக்னாலஜி என்பது வேகமாக வளரும் துறை என அடிக்கடி கேள்விப்படுகிறேன். இத்துறைக்கான எதிர்காலம் பற்றிக் கூறவும். | Kalvimalar - News

பேஷன் டெக்னாலஜி என்பது வேகமாக வளரும் துறை என அடிக்கடி கேள்விப்படுகிறேன். இத்துறைக்கான எதிர்காலம் பற்றிக் கூறவும்.மார்ச் 02,2010,00:00 IST

எழுத்தின் அளவு :

ஆண்டாண்டு காலமாக நுணுக்கமான வேலைப்பாடுகளுக்காக அறியப்பட்ட இந்திய ஆடைகள் இன்று அதிக அளவில் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதைக் காண்கிறோம். உலக பேஷன்களின் பரிசோதனை மையமாக இந்தியா திகழுகிறது என்று கூறும் அளவிற்கு நவீன தொழில்நுட்பத்தால் நாம் உலகின் கவனத்தை ஈர்த்திருக்கிறோம். இத்துறையின் முக்கியப் பிரிவுகளாக சந்தை ஆய்வு, டிசைனிங், கார்மென்ட் உற்பத்தி மற்றும் டெக்ஸ்டைல் ஆகியவற்றைக் கூறலாம். இத்துறையிலும் பட்டப்படிப்பு, பட்ட மேற்படிப்பு ஆகியவை நடத்தப்படுகின்றன.

பட்டப்படிப்பில் சிறப்புப் படிப்புகள் நடத்தப்படும் பிரிவுகள் இவை தான்...

Accessory designing and fashion designing
Garment Manufacturing Technology
Apparel marketing and Merchandising
Leather and Garment Design and Technology
Knitwear Design and Technology
Textile Design and Development
Fashion Journalism and Presentation 

இதில் முதல் படிப்புக்கு பிளஸ் 2 தான் தகுதியாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஆனால் பிற படிப்புகளுக்கு பட்டப்படிப்பு தான் தகுதி. இந்தியாவின் முதன்மையான பேஷன் கல்வி நிறுவனம் என்.ஐ.எப்.டி., எனப்படும் நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆப் பேஷன் டெக்னாலஜி. இது தவிர புதுடில்லியிலுள்ள ஐ.இ.சி., ஸ்கூல் ஆப் ஆர்ட் அண்டு பேஷன், இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் ஆர்ட் அண்டு பேஷன் டெக்னாலஜி, டில்லியிலுள்ள பியர்ல் அகாடமி ஆப் பேஷன் மற்றும் அங்குள்ள ஜே.டி. இன்ஸ்டிடியூட் ஆப் பேஷன் டெக்னாலஜி ஆகியவற்றைக் கூறலாம். பொதுவாக இந்த நிறுவனங்களின் படிப்புக்கு அகில இந்திய அளவில் நடத்தப்படும் போட்டித் தேர்வு மூலமாகவே சேர்க்கை நடத்தப்படுகிறது.


 

Advertisement
Search this Site
dinamalar advertisement tariff

மேலும்

Copyright © 2024 www.kalvimalar.com.All rights reserved | Contact us