ஆக்சுவரியல் சயின்ஸ் படித்தால் நல்ல வேலை வாய்ப்பு கிடைக்குமா? | Kalvimalar - News

ஆக்சுவரியல் சயின்ஸ் படித்தால் நல்ல வேலை வாய்ப்பு கிடைக்குமா?ஜனவரி 12,2010,00:00 IST

எழுத்தின் அளவு :

கடந்த கால நிகழ்வுகளை அலசி, எதிர்காலம் பற்றிய அம்சங்களை வடிவமைத்து வெவ்வேறு அனுமானிக்கக்கூடிய நிகழ்வுகளின் தாக்கத்தை சரியாக கணிப்பவர் ஆக்சுவரியல் திறனாளர். இன்சூரன்ஸ் துறையின் ஆதாரமாக விளங்குவதும் ஆக்சுவரியல் துறை தான். புள்ளிவிபரங்களின் அடிப்படையில் விபத்துக்கள், நோய்கள், உடற்குறைபாடுகள் போன்ற பலவற்றையும் கவனித்து ஒரு இன்சூரன்ஸ் நிறுவனம் பெற வேண்டிய பிரீமியம் தொகையை நிர்ணயிப்பது ஆக்சுவரியல் துறையினர் தான்.
ஆக்சுவரியல் திறன் படைத்தவர் செய்யும் பிற பணிகள் என இவற்றைக் கூறலாம்...


* பாலிசி எடுத்திருப்பவருக்கு இன்சூரன்ஸ் நிறுவனம் தர வேண்டிய லாப பங்கீட்டை நிர்ணயிப்பது


* பொது மற்றும் தனியார் துறையில் நீண்ட கால நிதித் திட்டங்களை வடிவமைப்பது


* நிதி நிறுவனங்களின் முதலீட்டுத் திட்டத்தை வடிவமைப்பது


* சமூகக் காப்பீடு மற்றும் பென்சன் திட்டங்களில் அரசின் நிதிப் பொறுப்பை
தீர்மானிப்பது கணிதத் திறன் என்பது இதற்கு மிக முக்கியம். ஜியாமட்ரியிலும் டிரிக்னாமெட்ரியிலும் கொஞ்சம் வீக் என்றாலும் பரவாயில்லை. ஆனால் அடிப்படைக் கணித விதிகளில் சிறப்பான திறன் பெற்றிருக்க வேண்டும்.
கணிதம், புள்ளியியல், பொருளாதாரம், பிசினஸ் அல்லது நிதி இவற்றில் ஒன்றில் பட்டப்படிப்பை சிறப்பாகப் படித்திருப்பவர் இத் துறையை மேற்கொள்ளலாம். ஆக்சுவரியல் சொசைட்டி ஆப் இந்தியா என்னும் துறையின் கட்டுப்பாட்டு நிறுவனம் நடத்தும் நுழைவுத் தேர்வில் வெற்றி பெற்று படிக்கலாம்.

Search this Site

Copyright © 2013 www.kalvimalar.com.All rights reserved | Contact us