சட்டப் படிப்பில் தரப்படும் சிறப்புப் படிப்புகள் என்ன? | Kalvimalar - News

சட்டப் படிப்பில் தரப்படும் சிறப்புப் படிப்புகள் என்ன? டிசம்பர் 02,2009,00:00 IST

எழுத்தின் அளவு :

இந்திய சட்டப் படிப்பானது 6 மாத டிப்ளமோவில் தொடங்கி ஒரு ஆண்டு டிப்ளமோ, 2 ஆண்டு, 3 ஆண்டு மற்றும் 5 ஆண்டு பட்டப்படிப்பு அல்லது ஒருங்கிணைந்த படிப்பாக நமது பல்கலைகழகங்களால் தரப்படுகிறது. வெறும் வக்கீலாக பயிற்சி செய்வது மட்டுமல்லாமல் பிசி-னஸ், கல்வி, அரசியல் என சட்டப்படிப்பு முடித்தவர் நுழையக்கூடிய துறைகள் இன்று பல உள்ளன.

நமது சட்டப் படிப்புகள் பின்வரும் சிறப்புப் பிரிவுகளில் தரப்படுகின்றன.

* சிவில் சட்டம்

* கிரிமினல் சட்டம்

* கம்பெனி அல்லது கார்ப்பரேட் சட்டம்

* டாக்சேஸன் லா (வருமான வரிச் சட்டம்/சுங்க வரிச் சட்டம்)

* பன்னாட்டுச் சட்டம்

* குடும்பச் சட்டம்

* அரசியலமைப்புச் சட்டம்

* நிர்வாகச் சட்டம்

* டி-ரேட் மார்க்/காப்பிரைட்/இன்டலக்சுவல் பிராபர்டி சட்டம்/ பேட்டன்ட் சட்டம்

பொதுவாக சட்டப்படிப்புகளில் சிறப்புப் பிரிவுகளைப் படிப்பவருக்கு வெறும் சட்டம் மட்டுமல்லாது அந்தத் துறையைப்பற்றிய பரந்த அறிவும் தேவைப்படுகிறது.

Advertisement
Search this Site
dinamalar advertisement tariff

Copyright © 2024 www.kalvimalar.com.All rights reserved | Contact us