போட்டித் தேர்வுகள் எழுதி வெற்றி பெற்றாலும் அஞ்சல் வழியில் படித்தவருக்கு வேலை தரப்படுவதில்லை என்று கூறப்படுவது உண்மைதானா? | Kalvimalar - News

போட்டித் தேர்வுகள் எழுதி வெற்றி பெற்றாலும் அஞ்சல் வழியில் படித்தவருக்கு வேலை தரப்படுவதில்லை என்று கூறப்படுவது உண்மைதானா? நவம்பர் 05,2009,00:00 IST

எழுத்தின் அளவு :

இது முழுக்க முழுக்க அப்பட்டமான கற்பனை தான். அஞ்சல் வழியில் படிப்பதால் கிடைக்கும் நேரத்தை பயன்படுத்திக் கொண்டு போட்டித் தேர்வுகளுக்காக நன்றாகத் தயாராகி வெற்றி பெற்று நல்ல வேலைகளில் இருப்பவர் பலர் உள்ளனர்.

எனவே இது போன்ற தகவல்களை நம்ப வேண்டாம். நீங்கள் பி.ஓ., தேர்வுகள் எழுதுவதாக குறிப்பிட்டுள்ளீர்கள். தற்போது இது தான் மிகக் கடுமையான போட்டியை உள்ளடக்கியுள்ளது.

எனவே உங்களது அடிப்படை பலம் என்ன, பலவீனமான பகுதிகள் என்ன போன்றவற்றை நன்றாக அறிந்து கொண்டு அதற்கேற்ப இந்தத் தேர்வுகளுக்குத் தயாராகலாம். 2 அல்லது 3 பேராக சேர்ந்து பயிற்சி செய்வது அல்லது ஒரு சிறப்புப் பயிற்சி நிறுவனத்தில் சேர்ந்து பயிற்சி பெறுவது போன்றவை தான் பலன் தரும். இவற்றை நன்றாக ஞாபகத்தில் கொள்ளவும்.

 

 

Search this Site

Copyright © 2013 www.kalvimalar.com.All rights reserved | Contact us