டேட்டா பேஸ் அட்மினிஸ்டிரேட்டராக பணியாற்ற விரும்புகிறேன். இதற்கு என்ன தகுதி மற்றும் திறன்கள் தேவை? | Kalvimalar - News

டேட்டா பேஸ் அட்மினிஸ்டிரேட்டராக பணியாற்ற விரும்புகிறேன். இதற்கு என்ன தகுதி மற்றும் திறன்கள் தேவை?செப்டம்பர் 26,2009,00:00 IST

எழுத்தின் அளவு :

கம்ப்யூட்டர் சயின்ஸ் அல்லது மேனேஜ்மென்ட் இன்பர்மேஷன் சிஸ்டம்ஸ் இவற்றில் ஒன்றில் பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும். டேட்டாபேஸ் சான்றிதழ் பெற்றிருப்பதும் அவசியம். லாஜிக், கணிதம்,கம்ப்யூட்டர் முறைகளில் சிறப்பான திறன் தேவை.வெறும் தகுதிகளைக் கொண்டு எந்த வேலையும் இன்றைய சூழலில் பெற முடியாது என்பதை நீங்கள் மனதில் கொள்ள வேண்டும். துவக்கத்தில் ஒரு ஐ.டி., நிறுவனத்தில் பணியில் சேர முயற்சியுங்கள்.

அந்த நிறுவனம் பயன்படுத்தும் டேட்டாபேஸ் மற்றும் ஆபரேடிங் சிஸ்டம் ஆகியவற்றில் சிறப்பான அறிமுகம் பெறுங்கள். தொலைதூரக் கல்வி முறையிலாவது உங்களது பணி தொடர்பான கூடுதல் தகுதிகளைப் பெற முயற்சியுங்கள். குறிப்பிட்ட டேட்டாபேஸின் ஆபரேஷன், டிசைன், மற்றும் நடைமுறைப்படுத்துதல் ஆகியவற்றில் நல்ல திறன்களைப் பெறுங்கள். உங்களது பணியில் உங்களது திறன்கள் வெளிப்படுமாறு பார்த்துக் கொள்ளுங்கள். நிறுவனம் உங்களது டேட்டாபேஸ் திறன்களை அறிந்து கொள்ளும் போது கூடுதல் பொறுப்புக்கள் தரப்பட்டு அதை நீங்கள் திறம்பட செயல்படுத்த முடியும்.

 

Search this Site

மேலும்

Copyright © 2013 www.kalvimalar.com.All rights reserved | Contact us