புதுச்சேரியில் எம்.எஸ்சி., நர்சிங் படிப்பு எங்கு படிக்கலாம்? | Kalvimalar - News

புதுச்சேரியில் எம்.எஸ்சி., நர்சிங் படிப்பு எங்கு படிக்கலாம்?செப்டம்பர் 13,2009,00:00 IST

எழுத்தின் அளவு :

 

புதுச்சேரியில் இயங்கிடும் மதர் தெரஸா இன்ஸ்டிடியூட் ஆப் ஹெல்த் சயின்சஸ் என்னும் கல்வி நிறுவனத்தில் கடந்த ஆண்டு முதல் எம்.எஸ்சி., நர்சிங் படிப்பு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்தப் படிப்பில் 17 மாணவர்கள் சேர்த்துக் கொள்ளப்படுவர்.

மெடிக்கல் மற்றும் சர்ஜிகல் நர்சிங், கம்யூனிடி நர்சிங், அப்ஸ்ட்ரடிக்ஸ் அண்ட் கைனகாலஜி நர்சிங், மென்டல் நர்சிங் ஆகிய பிரிவுகளில் இவர்கள் அனுமதிக்கப்படுவர். பி.எஸ்சி., நர்சிங் படிப்பில் குறைந்தது 55% மதிப்பெண்கள் பெற்று, படிப்பின் பின் குறைந்தது ஓராண்டு கிளினிகல் பயிற்சி பெற்றிருப்பவர் மட்டும் இதற்கு விண்ணப்பிக்கலாம். இந்தப் படிப்பின் 2ம் ஆண்டில் நடைமுறைப் பயிற்சி மட்டுமே தரப்படும். தியரி வகுப்புகள் கிடையாது.

Advertisement
Search this Site
dinamalar advertisement tariff

மேலும்

Copyright © 2024 www.kalvimalar.com.All rights reserved | Contact us