தேவை கல்லூரி தேர்வில் கவனம்... | Kalvimalar - News

தேவை கல்லூரி தேர்வில் கவனம்...

எழுத்தின் அளவு :

பிளஸ் 2 முடித்த பின் கல்லுõரி படிப்பு என்பது, வெறும் படிப்பு மட்டுமல்ல. இது எதிர்காலத்தை தீர்மானிக்கும் இடம். எனவே இதற்கு எவ்வளவு முக்கியம் தர வேண்டும் என்பது தெளிவாகிறது. என்னதான் படிப்பது நமது கையில் இருந்தாலும், கற்றுக்கொடுக்கும் ஆசிரியரின் தரம் மற்றும் பயிலும் கல்லுõரி அதைவிட முக்கியமானது.

இன்று ஏதாவது ஒரு குழந்தையை அழைத்து நீ என்ன ஆகப் போகிறாய் என்றால், கலெக்டர், டாக்டர், இன்ஜினியர் என அடுத்த வினாடிகளில் பதில் வரும். இந்த இலக்கு, கடைசி வரை அக்குழந்தையின் எண்ணத்தில் பதிந்திருக்குமா என்பது சந்தேகமே. இருப்பினும் சிலர் பள்ளி பருவத்திலேயே தங்களது இலக்கை தேர்ந்தெடுத்து, எந்த துறையில் வளர வேண்டும் என்பதைப் பற்றி முடிவு செய்கிறார்கள்.

சிலர் ஏற்கனவே தீர்மானிக்கவில்லை என்றாலும் தற்போதுள்ள தகுதி, திறன் அடிப்படையில் எது பொருத்தமானது என்பதை முடிவு செய்ய வேண்டும். ஒரு படிப்பு பிரபலமாக இருப்பது என்பதற்காகவும், நண்பர்கள், பெற்றோர் சொல்வதற்காகவும் அந்த படிப்பை தேர்வு செய்யக் கூடாது. அப்படிப்பில் தனக்குள்ள ஆர்வம், திறன் அடிப்படையில்தான் முடிவு செய்ய வேண்டும்.

எப்படி இருக்க வேண்டும்

* கல்லுõரிகளை தேர்வு செய்யும் போது அந்த கல்லுõரி அங்கீகாரம் பெற்ற கல்லுõரியாக இருக்கிறதா என்பதை பார்க்க வேண்டியது முதல் செயல்.

* வகுப்பறைகள், வளாக கட்டடம், ஒர்க்ஷாப், கம்ப் யூட்டர் லேப், இன்ஜினியரிங் லேபில் நவீன உபகரணங்கள், ஆய்வுக்கூட வசதிகள் இருக்கிறதா என்பதை பார்க்க வேண்டும்.

* பேராசிரியர்கள், மாணவர்  ஆசிரியர்களுக்கு இடையிலான விகிதம், சிறப்பு வருகை பேராசிரியர்கள் ஆகியவற்றை கவனிக்க வேண்டும். ஏ.ஐ.சி.டி.இ., விதிமுறைகளின் படி ஆசிரியர்களின் தகுதிகளை வெப்சைட்டில் கல்லுõரி வெளியிட வேண்டும்

* நுõலகம், இன்டர்நெட், விடுதி, கருத்தரங்கம், மருத்துவம், உடற்பயிற்சி கூடம், போக்குவரத்து ஆகிய வசதிகள் உள்ளதா என்பதை பார்க்க வேண்டும்.

வேலைவாய்ப்பு

தற்போதுள்ள மாணவர்கள் படிக்கும் போதே வளாகத்தேர்வில் வெற்றி பெற்று, வேலையை உறுதி செய்து விடுகின்றனர். எனவே நாம் சேரப்போகும் கல்லுõரியில் கடைசி ஐந்து ஆண்டுகளாக வேலைவாய்ப்பு எப்படி என்பதை தெரிந்து கொள்ள வேண்டும்.

தனிநபரின் வளர்ச்சியில் இதுபோன்ற கூடுதல் பாடத்திட்ட நடவடிக்கைகள் உதவுகின்றன. ஆண்டு விழா, விளையாட்டு விழா, மாணவர்கள் கிளப், செமினார், இண்டஸ்ட்ரியல் டிரைனிங், சமூக நடவடிக்கைகள், என்.சி.சி., என்.எஸ்.எஸ்., போன்றவை மாணவர்களின் திறனை மேம்படுத்துகின்றன.

நகரங்களின் அருகில் கல்லுõரி இருப்பது பயிற்சி மற்றும் வேலை வாய்ப்புகளுக்கு உதவும். என்றாலும் இட அமைவை விட கல்லுõரியின் தரம் முக்கியம் என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.

கட்டணம்

கல்லுõரியில் அரசு விதித்த கட்டணத்தை விட மறைமுகமாக ஏதும் அதிகமாக கட்டணம் வசூலிக்கப்படுகிறதா என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.

Search this Site

Copyright © 2018 www.kalvimalar.com.All rights reserved | Contact us