நோட் புக்கில் கட்டுப்பாடு | Kalvimalar - News

நோட் புக்கில் கட்டுப்பாடு

எழுத்தின் அளவு :

நடிகர், நடிகைகள் படம் போட்ட நோட்டுகளை மாணவர்கள் பயன்படுத்துவது, அதிகரித்து வருகிறது.

நோட்டுகளில் உள்ள படங்களை வைத்து வகுப்பறைக்குள் மாணவர்கள், சில நேரம் பட்டிமன்றமே நடத்துகின்றனர். இதனால் மாணவர்களுக்குள் சண்டை வருவதற்கு கூட வாய்ப்பு உள்ளது. வகுப்பறைகளில் மாணவர்களின் கவனம் சிதறுகிறது.

இக்கலசாரத்தை வளரவிட்டால், மாணவர்களின் படிப்பு பாதிக்கப்படும். இதை உணர்ந்த பஞ்சாப் மாநில கல்வித்துறை, நடிகர், நடிகைகள் படம் போட்ட நோட் புத்தகங்களை பயன்படுத்துவதற்கு தடை விதித்துள்ளது. மீறுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரித்துள்ளது.

பஞ்சாப் அரசின் இம்முடிவுக்கு, அம்மாநில கல்வியாளர்கள், பெற்றோர் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.  தமிழக அரசும் இது குறித்து பரிசீலிக்க வேண்டும் என இங்குள்ள கல்வியாளர்கள், பெற்றோர்கள் எதிர்பார்க்கின்றனர்.

Search this Site

Copyright © 2018 www.kalvimalar.com.All rights reserved | Contact us