கூகுள் அறிவியல் போட்டி | Kalvimalar - News

கூகுள் அறிவியல் போட்டி

எழுத்தின் அளவு :

உலகம் முழுவதிலும் உள்ள 13 முதல் 18 வயது வரையிலான மாணவர்களின் அறிவியல் சார்ந்த ஆர்வத்தை ஊக்குவிக்கும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் கூகுள் நிறுவனம் அறிவியல் கண்காட்சி மற்றும் போட்டியை நடத்துகிறது. இந்த ஆண்டிற்கான போட்டிக்கு டிச.,12ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்!

முக்கியத்துவம்: பள்ளி மாணவர்களின் சமூக பிரச்சனைகள் சார்ந்த அறிவை விரிவுபடுத்தி, அந்த பிரச்சனைகள் குறித்து அவர்களுக்குள் எழும் கேள்விகளுக்கு அறிவியல் கண்டுபிடிப்புகளின் மூலம், அவர்களையே விடை தேட வைக்கும் ஒரு முயற்சியே இந்த போட்டி.

சுற்றுச்சூழல், தொழில்நுட்பம், ரோபடிக்ஸ், விண்வெளி, சுகாதாரம், சமுதாயம், உணவு, பயணம், ஆற்றல் மற்றும் ஆர்டிபிஷியல் இண்டலிஜன்ஸ் ஆகிய பத்து பிரிவுகளில் ஏதேனும் ஒரு தலைப்பை தேர்ந்தேடுத்து தங்களது ஆராய்ச்சியை மாணவர்கள் மேற்கொள்ளலாம். தனி நபராகவோ அல்லது இரண்டு முதல் மூன்று நபர்களைக் கொண்ட குழுவாகவோ இந்த போட்டிக்கு விண்ணப்பிக்கலாம். பெற்றோரது அனுமதி அவசியம்.

பரிசுகள்:
* உலகளவில் முதல் இடம் பெறும் மாணவருக்கு ‘கிராண்ட் பிரைஸ்’ ஆக 50 ஆயிரம் அமெரிக்க டாலர்கள் (இந்திய ரூபாய் மதிப்பில் 35 லட்சத்து 69 ஆயிரம்) அவர்களது உயர்கல்விக்கான உதவித்தொகையாகக் கூகுள் நிறுவனத்தின் சார்பாக வழங்கப்படுகிறது.

* லீகோ எஜூகேஷன் சார்பாக 15,000 அமெரிக்க டாலர்கள் பரிசாகவும், டென்மார்க்கில் உள்ள லீகோ நிறுவனத்தைச் சுற்றி பார்க்கும் வாய்ப்பு.

* நேஷனல் ஜியோகிராபிக் நிறுவனம் சார்பாக, ‘எக்ஸ்ப்ளோரர் அவார்ட்’, 15 ஆயிரம் அமெரிக்க டாலர்கள் மற்றும் களேபாகோஸ் தீவுகளுக்கு 15 நாட்கள் கல்வி சுற்றுலா.

* சயின்டிபிக் அமெரிக்கன் நிறுவனம் சார்பாக ‘இனோவேட்டர் அவார்ட்’ என்கிற விருது மற்றும் 15 ஆயிரம் அமெரிக்க டாலர்கள் கல்வி உதவித்தொகை.

* சிறந்த தொழில் நுட்பம் சார்ந்த ஆராய்ச்சியை மேற்கொண்ட மாணவருக்கு காலக்டிக் நிறுவனம் சார்பாக ‘பயனீர் அவார்ட்’ ஆக 15 ஆயிரம் அமெரிக்க டாலர்கள்.

* சிறந்த முறையில் தங்களது மாணவர்களை ஊக்குவித்து அவர்களுக்குத் துணை நின்ற ஆசிரியருக்கு, லீகோ நிறுவனத்தின் சார்பாக ‘இன்ஸ்பயிரிங் எஜூகேட்டர் அவார்ட்’ மற்றும் கல்வி சார்ந்த பொருட்களை வாங்குவதற்காக 5 ஆயிரம் அமெரிக்க டாலர்கள்.

* உலக அளவில் இறுதி போட்டிக்கு தகுதி பெற்ற 20 மாணவர்களுக்கு அமெரிக்காவில் உள்ள கூகுள் நிறுவனத்தைச் சுற்றி பார்க்கும் வாய்ப்பு.

* மாநில அளவில் வெற்றி பெறும் 53 மாணவர்களுக்கு ‘ஆண்ட்ராய்ட் டேப்ளெட்’ மற்றும் இதர பரிசுகள். 100 ரீஜினல் வெற்றியாளர்களுக்குப் பரிசாக ‘குரோம்புக்’ மற்றும் இதர பரிசுகள்.

விண்ணப்பிக்கும் முறை: இந்த போட்டிக்காக கூகுள் நிறுவனத்தால் உருவாக்கப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ இணையத்தளத்தில், ஆன்லைன் வாயிலாக மட்டுமே விண்ணப்பிக்க முடியும்.

விண்ணப்பிக்கக் கடைசி நாள்: டிசம்பர் 12

விபரங்களுக்கு: www.googlesciencefair.com

Search this Site
dinamalar-advertisement-tariff-2018

மேலும்

Copyright © 2018 www.kalvimalar.com.All rights reserved | Contact us