எய்ம்ஸ் அட்மிஷன் | Kalvimalar - News

எய்ம்ஸ் அட்மிஷன்

எழுத்தின் அளவு :

நாட்டின் பல்வேறு பகுதிகளில் செயல்படும் ‘ஆல் இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் மெடிக்கல் சயின்ஸ்’ (எய்ம்ஸ்) கல்வி நிறுவனத்தில் இளநிலை மருத்துவ படிப்பிற்கான மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது.

நாட்டின் பிற மருத்துவ கல்லூரிகளில் மத்திய அரசு நடத்தும் ‘நீட்’ தேர்வின் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடைபெறும் நிலையில், எய்ம்ஸ் மற்றும் ஜிப்மர் ஆகிய இரு கல்வி நிறுவனங்கள் மட்டும் பிரத்யேக நுழைவு தேர்வுகளின் மூலம் மாணவர் சேர்க்கை நடத்துவது குறிப்பிடத்தக்கது.

படிப்பு: எம்.பி.பி.எஸ்.,

தகுதிகள்: 12ம் வகுப்பில் ஆங்கிலம், இயற்பியல், உயிரியல், வேதியியல் ஆகிய பாடங்களை முக்கிய பாடங்களாக தேர்வு செய்து படித்து 60 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். எஸ்.சி., / எஸ்.டி., பிரிவு மாணவர்கள் 50 சதவீத மதிப்பெண்களும், மாற்றுத் திறனாளி மாணவர்கள் 45 சதவீத மதிப்பெண்களும் பெற்றிருந்தால் போதுமானது.

விண்ணப்பிக்கும் முறை: எய்ம்ஸ் கல்வி நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையத்தளத்தின் மூலம் பதிவு செய்யலாம்.

தேர்வு செய்யும் முறை: எய்ம்ஸ் கல்வி நிறுவனம் நடத்தும் பிரத்யேக நுழைவுத் தேர்வில், மாணவர்கள் பெறும் மதிப்பெண்களில் அடிப்படையில் மட்டுமே மாணவர் சேர்க்கை நடத்தப்படும்.

விண்ணப்பிக்கக் கடைசி நாள்: ஜனவரி 3

தேர்வு நாள்: மே 25 மற்றும் 26

விபரங்களுக்கு: www.aiimsexams.org

Search this Site
dinamalar-advertisement-tariff-2018

மேலும்

Copyright © 2018 www.kalvimalar.com.All rights reserved | Contact us