சிமேட் 2019 | Kalvimalar - News

சிமேட் 2019

எழுத்தின் அளவு :

நாடு முழுவதிலும் உள்ள பல்வேறு மேலாண்மை கல்வி நிறுவனங்களில் சேர்க்கை பெற விரும்பும் மாணவர்களுக்காக நடத்தப்படும் ‘காமன் மேனேஜ்மெண்ட் டெஸ்ட்’ எனப்படும் சிமேட் தேர்வு பற்றிய அறிவிப்பை நேஷனல் டெஸ்டிங் ஏஜன்சி (என்.டி.ஏ.,) வெளியிட்டுள்ளது.

தகுதிகள்: அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தில் இளநிலைப் பட்டப்படிப்பை முடித்திருக்க வேண்டும். இறுதியாண்டு படிக்கும் மாணவர்களும் விண்ணப்பிக்கலாம். குறிப்பாக இந்திய குடியுரிமை பெற்றவராக இருப்பது அவசியம். வயது வரம்பு ஏதும் இல்லை.

விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன் மூலம் மட்டுமே மாணவர்கள் பதிவு செய்ய முடியும்.

தேர்வு முறை: கணினி வழித் தேர்வாக மட்டுமே நடைப்பெறும். குவாண்டிடேடிவ் டெக்னிக்ஸ் அண்ட் டேட்டா இண்டர்ப்ரிடேஷன், லாஜிக்கல் ரீசனிங், லாங்குவேஜ் காம்பிரிஹென்ஷன், ஜெனரல் அவர்னஸ் என நான்கு பிரிவுகளில் தலா 25 கேள்விகள் கேட்கப்படும். ஒவ்வொரு சரியான பதிலுக்கும் 4 மதிப்பெண்கள் வழங்கப்படும். தவறான பதில்களுக்கு 1 மதிப்பெண் குறைக்கப்படும்.

விண்ணப்பிக்கக் கடைசி நாள்: நவம்பர் 30

தேர்வு நாள்: ஜனவரி 28

தேர்வு முடிவுகள்: பிப்ரவரி 8

விபரங்களுக்கு: ntacmat.nic.in

Advertisement
Search this Site
dinamalar advertisement tariff

மேலும்

Copyright © 2024 www.kalvimalar.com.All rights reserved | Contact us