டிசைனிங் நுழைவுத் தேர்வு | Kalvimalar - News

டிசைனிங் நுழைவுத் தேர்வு

எழுத்தின் அளவு :

மத்திய வர்த்தக மற்றும் தொழில்துறை அமைச்சகத்தின் கீழ் இயங்கும் நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆப் டிசைன் (என்.ஐ.டி.,) கல்வி நிறுவனங்களில் இளநிலை, முதுநிலை மற்றும் டிப்ளமா படிப்புகளில் சேர்க்கை பெறுவதற்கான டிசைன் ஆப்டிடியூட் டெஸ்ட் (டி.ஏ.டி.,) எனும் நுழைவுத் தேர்வு பற்றிய அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

படிப்புகள்:
இளநிலை (பி.டெஸ்.,) - 4 வருடங்கள்
முதுநிலை (எம்.டெஸ்.,) - 2.6 வருடங்கள்
டிப்ளமா (கிராட்ஜூவேட் டிப்ளமா புரோகிராம் இன் டிசைன்) - 4 வருடங்கள்

கல்வி நிறுவன வளாகங்கள்:
பி.டெஸ்., - அகமதாபாத்
எம்.டெஸ்., - அகமதாபாத், பெங்களூரு மற்றும் காந்திநகர்
ஜி.டி.பி.டி., - குருக்ஷேத்ரா, விஜயவாடா, போபால் மற்றும் ஜோர்ஹட்

தகுதி:
இளநிலை டிசைனிங் மற்றும் டிப்ளமா படிப்புகளுக்கு 12ம் வகுப்பு முடித்தவராக இருக்க வேண்டும். முதுநிலை டிசைனிங் படிப்பிற்கு துறை சார்ந்த பிரிவில் இளநிலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு:
பி.டெஸ்., - 20 வயதிற்குட்பட்டவராக இருப்பது அவசியம்.
எம்.டெஸ்., - 30 வயதிற்குட்பட்டவராக இருக்க வேண்டும்.
எஸ்.சி., / எஸ்.டி., / மாற்றுத்திறனாளி பிரிவினருக்கு வயது வரம்பில் 3 ஆண்டுகள் வரை விலக்களிக்கப்படும்.

விண்ணப்பிக்கும் முறை: என்.ஐ.டி.,யின் அதிகாரப்பூர்வ இணையத்தளத்தில் மாணவர்கள் தங்களது விண்ணப்பத்தைப் பதிவு செய்யலாம்.

தேர்வு முறை: டி.ஏ.டி., பிரிலிம்ஸ் மற்றும் டி.ஏ.டி., மெயின்ஸ் என இரண்டு நிலைகளில் இந்த தேர்வு நடத்தப்படும். பிரிலிம்ஸ் தேர்வில் எடுக்கும் மதிப்பெண்ணின் அடிப்படையில் மாணவர்கள் மெயின்ஸ் தேர்விற்கு தகுதி பெறுவர். என்.ஐ.டி., கல்வி நிறுவனத்தில் சேர்க்கை பெற இந்த இரண்டு தேர்வுகளிலும் தேவையான மதிப்பெண் பெற வேண்டியது அவசியம்.

விண்ணப்பிக்கக் கடைசி நாள்: நவம்பர் 22

தேர்வு நாள்: ஜனவரி 6

விபரங்களுக்கு: www.nid.edu

Advertisement
Search this Site
dinamalar advertisement tariff

Copyright © 2024 www.kalvimalar.com.All rights reserved | Contact us