ஜப்பான் ஸ்காலர்ஷிப் | Kalvimalar - News

ஜப்பான் ஸ்காலர்ஷிப்

எழுத்தின் அளவு :

முதுநிலை பட்டப்படிப்பு முடித்த இளம் இந்திய ஆராய்ச்சியாளர்களுக்கான உதவித்தொகை திட்டத்தை யுனெஸ்கோ அமைப்புடன் இணைந்து ஜப்பான் அரசு வழங்குகிறது!

ஜப்பான் இளம் ஆராய்ச்சியாளர்
வளரும் நாடுகளைச் சேர்ந்த இளம் ஆராய்ச்சியாளர்களை ஊக்குவிக்கும் விதமாக, ஜப்பான் அரசு இந்த உதவித்தொகையை வழங்குகிறது.

ஆய்வு துறைகள்:
* என்விரான்மெண்ட்
* இண்டர்கல்ச்சுரல் டயலாக்
* இன்பர்மேஷன் அண்ட் கம்யூனிகேஷன் டெக்னாலஜி
* பீஸ்புல் அண்ட் கான்பிலிக் ரிசல்யூஷன்

ஆகிய நான்கு தலைப்புகளின் கீழ் மேற்கொள்ளும் ஆராய்ச்சிகளுக்கு மட்டுமே இந்த உதவித்தொகை வழங்கப்படுகிறது.

தகுதிகள்:
துறை சார்ந்த பிரிவில் எம்.ஏ., அல்லது எம்.எஸ்சி., படிப்பை அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தில் பெற்றிருக்க வேண்டும். ஜப்பானிய நாட்டில் உள்ள ஏதேனும் ஒரு கல்வி நிறுவனத்திடமிருந்து ஆராய்ச்சிக்கான அனுமதியைப் பெற்றிருக்க வேண்டும். பெண்களுக்கு முன்னுரிமை உண்டு.

வயது வரம்பு:
40 வயதிற்குட்பட்டவராக இருக்க வேண்டும். ஜனவரி 1, 1978ம் தேதிக்கு முன் பிறந்தவர்களின் விண்ணப்பம் ஏற்றுக்கொள்ளப்படாது.

கால அவகாசம்:
3 மாதங்கள் முதல் 9 மாதங்கள் வரை ஆராய்ச்சிக்கான இந்த உதவித்தொகை வழங்கப்படுகிறது.

உதவித்தொகை:
தேர்வு செய்யப்பட்ட ஒவ்வொரு மாணவருக்கும், ஆராய்ச்சிக்காக 10 ஆயிரம் அமெரிக்க டாலர் (இந்திய ரூபாய் மதிப்பில் 7 லட்சத்து 35 ஆயிரம் ரூபாய்) வழங்கப்படும்.

விண்ணப்பிக்கும் முறை:
இதற்கான விண்ணப்பத்தை மாணவர்கள் யுனெஸ்கோ பெல்லோஷிப் வலைத்தளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். பூர்த்தி செய்த விண்ணப்பத்தை புதுடெல்லியில் இருக்கும் இந்திய மனிதவளத் துறை அமைச்சகத்தின் நிர்வாக முகவரிக்கு அஞ்சல் வழியில் அனுப்ப வேண்டும்.

விண்ணப்பிக்கக் கடைசி நாள்: நவம்பர் 15

விபரங்களுக்கு: http://mhrd.gov.in

Advertisement
Search this Site
dinamalar advertisement tariff

Copyright © 2024 www.kalvimalar.com.All rights reserved | Contact us