மரைன் இன்ஜினியரிங் படிப்பு | Kalvimalar - News

மரைன் இன்ஜினியரிங் படிப்பு

எழுத்தின் அளவு :

மத்திய அரசின் கீழ் மும்பையில் இயங்கிவரும் இந்தியன் கடற்சார் பல்கலைக்கழகத்தில் (ஐ.எம்.யு.,) ஓர் ஆண்டு முதுநிலை  டிப்ளமா படிப்பிற்கான மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது.

படிப்பு: போஸ்ட் கிராட்ஜூவேட் டிப்ளமா இன் மரைன் இன்ஜினியரிங் (பி.ஜி.டி.எம்.இ.,)

தகுதிகள்: திருமணம் ஆகாத ஆண், பெண் ஆகிய இரு பாலரும் விண்ணப்பிக்கலாம். மெக்கானிக்கல், நேவல், ஆர்கிடெக்ச்சர், ஆட்டோமொபைல் போன்ற பொறியியல் பிரிவுகளில் ஏதேனும் ஒன்றில் இளநிலை பட்டத்தை அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தில் 50 சதவீத மதிப்பெண்களுடன் பெற்றிருக்க வேண்டும். எஸ்.சி., எஸ்.டி., பிரிவு மாணவர்களுக்கு 5 சதவீதம் வரை மதிப்பெண்ணில் விலக்கு அளிக்கப்படும். நல்ல உடல் நலமும், தெளிவான் கண் பார்வையும் இருக்க வேண்டியது முக்கியம்.

வயது வரம்பு: 28 வயதிற்குட்பட்டவராக இருக்க வேண்டியது அவசியம். எஸ்.சி., எஸ்.டி., பிரிவினர் 33 வயதிற்குள் இருந்தால் போதுமானது.

மொத்த இடங்கள்: 40

விண்ணப்பிக்கும் முறை: விண்ணப்பத்தை ஐ.எம்.யூ.,- மும்பை கல்வி நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ வலைத்தளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். பூர்த்தி செய்த விண்ணப்பத்தைக்
கல்வி நிறுவன முகவரிக்கு அஞ்சல் வழியில் அனுப்பி வைக்க வேண்டும்.

விண்ணப்பிக்கக் கடைசி நாள்: நவம்பர் 30

நேர்முகத் தேர்வு: டிசம்பர் 7, 10 மற்றும் 11

விபரங்களுக்கு: https://imumumbaiport.ac.in/online

Search this Site
dinamalar-advertisement-tariff-2018

மேலும்

Copyright © 2018 www.kalvimalar.com.All rights reserved | Contact us