பி.ஐ.எம்.டெக்., அட்மிஷன் | Kalvimalar - News

பி.ஐ.எம்.டெக்., அட்மிஷன்

எழுத்தின் அளவு :

உத்தரபிரதேசத்தில் உள்ள பிர்லா இன்ஸ்டிடியூட் ஆப் மேனேஜ்மெண்ட் டெக்னாலஜி (பி.ஐ.எம்.டெக்.,) கல்வி நிறுவனத்தில் இரண்டு வருட முதுநிலை மேனேஜ்மெண்ட் டிப்ளமா படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது.

படிப்புகள்:
போஸ்ட் கிராட்ஜூவேட் டிப்ளமா இன் மேனேஜ்மெண்ட்
போஸ்ட் கிராட்ஜூவேட் டிப்ளமா இன் மேனேஜ்மெண்ட் (இண்டர்நேஷனல் பிசினஸ்)
போஸ்ட் கிராட்ஜூவேட் டிப்ளமா இன் மேனேஜ்மெண்ட் (இன்ஷுரன்ஸ் பிசினஸ்)
போஸ்ட் கிராட்ஜூவேட் டிப்ளமா இன் மேனேஜ்மெண்ட் (ரீடெய்ல் மேனேஜ்மெண்ட்)

தகுதிகள்: இளநிலை பட்டப்படிப்பில் 50 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். கேட் / எக்சாட் / ஜிமேட் தகுதி தேர்வின் மதிப்பெண்கள் முக்கிய தகுதியாக கருதப்படும்.

விண்ணப்பிக்கும் முறை: பி.ஐ.எம்.டெக்., கல்வி நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ வலைத்தளத்தில் இதற்கான விண்ணப்பங்கள் கிடைக்கும். விண்ணப்பங்களை ஆன்லைன் மூலம் மட்டுமே பதிவு செய்ய முடியும்.

சேர்க்கை முறை: தகுதி தேர்வின் மதிப்பெண்களின் அடிப்படையில் விண்ணப்பங்கள் தேர்வு செய்யப்படும். எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் அடிப்படையிலேயே மாணவர் சேர்க்கை நடைபெறும்.

விண்ணப்பிக்கக் கடைசி நாள்: டிசம்பர் 2

விபரங்களுக்கு: www.bimtech.ac.in

Advertisement
Search this Site
dinamalar advertisement tariff

Copyright © 2024 www.kalvimalar.com.All rights reserved | Contact us