கல்வி உதவித்தொகை | Kalvimalar - News

கல்வி உதவித்தொகை

எழுத்தின் அளவு :

நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆப் கேரியர் எஜூகேஷன் (என்.ஐ.சி.இ.,) அமைப்பானது நேஷனல் ஸ்காலர்ஷிப் தேர்வு குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

தகுதிகள்:
5ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை பயிலும் மாணவர்கள் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தில் இளநிலை பட்டப்படிப்பு அல்லது டிப்ளமா பயிலும் மாணவர்கள் இத்தேர்விற்கு விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பிக்கும் முறை:
என்.ஐ.சி.இ., அமைப்பின் அதிகாரப்பூர்வ இணையத்தளம் வாயிலாக, மாணவர்கள் பதிவு செய்யலாம்.

தேர்வு முறை:
கணினி வழி தேர்வாக மட்டுமே நடைபெறும். ‘அப்ஜெக்டிவ்’ அடிப்படையில் பொது அறிவு, கணிதம் மற்றும் சமூக அறிவியல் பாடங்களில் கேட்கப்படும் கேள்விகளுக்கு சரியான பதில் அளித்து தகுதி பெறுபவர்களின் தரவரிசைப் பட்டியல் வெளியிடப்பட்டு, மாணவர்கள் பெற்றிருக்கும் ரேங்க் அடிப்படையில், ஸ்காலர்ஷிப் தொகை வழங்கப்படும். கலந்து கொண்ட அனைத்து மாணவர்களுக்கும் பங்குப் பெற்றமைக்கான சான்றிதழ் வழங்கப்படும்.

விண்ணப்பிக்கக் கடைசி நாள்: செப்டம்பர் 30

தேர்வு நாள்: டிசம்பர் 16

விபரங்களுக்கு: www.niceedu.org

Search this Site
dinamalar-advertisement-tariff-2018

Copyright © 2018 www.kalvimalar.com.All rights reserved | Contact us