ஆராய்ச்சி உதவித்தொகை | Kalvimalar - News

ஆராய்ச்சி உதவித்தொகை

எழுத்தின் அளவு :

இந்தியாவில் பிஎச்.டி., பட்டம் பெற விரும்பும் இந்திய மற்றும் பிற ஆசிய நாடுகளைச் சேர்ந்த மாணவர்களுக்கான உதவித் தொகை திட்டத்தை ஜவஹர்லால் நேரு மெமோரியல் அறிவித்துள்ளது!

ஜவஹர்லால் நேரு மெமோரியல் பண்ட்
இந்தியாவின் தேசிய முக்கியத்துவம் பெற்ற கல்வி நிறுவனங்களில் பிஎச்.டி., படிக்க விரும்பும் மாணவர்களுக்குக் கிடைத்துள்ள சிறந்த வாய்ப்பு, இந்த உதவித்தொகை திட்டம்.

துறைகள்: இந்தியன் ஹிஸ்ட்ரி அண்ட் சிவிலைசேஷன், சோஷியாலஜி, கம்பேரிடிவ் ஸ்டடீஸ் இன் ரிலீஜியன் அண்ட் கல்ச்சர், எக்கனாமிக்ஸ், ஜியோகிராபி, பிலாசபி, எக்காலஜி அண்ட் என்விரான்மெண்ட்

தகுதிகள்: விண்ணப்பிக்க விரும்புவோர் ஆங்கில மொழி வல்லமை பெற்றிருக்க வேண்டும். முதுநிலை படிப்பில் குறைந்தது 60 சதவீத மதிப்பெண்களுடன் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும், பிஎச்.டி., பட்டத்திற்கான தலைப்பை பதிவு செய்திருக்க வேண்டும்.

வயது வரம்பு: 35 வயதிற்குட்பட்டவர்கள் மட்டுமே இந்த ஸ்காலர்ஷிப் திட்டத்திற்குத் தகுதியானவர்.

கால அளவு: அதிகபட்சம் 2 ஆண்டுகள்

உதவித்தொகை: கல்விக் கட்டணம் மற்றும் இதர செலவுகளுக்காக மாதம் ரூ.18,000 வழங்கப்படுகிறது. தவிர, புத்தகம் மற்றும் பிற ஸ்டேஷ்னரி பொருள்களுக்காக ஆண்டுக்கு ரூ.15,000 வழங்கப்படுகிறது.

விண்ணப்பிக்கக் கடைசி நாள்: மே 31

விபரங்களுக்கு: www.jnmf.in

Search this Site

Copyright © 2018 www.kalvimalar.com.All rights reserved | Contact us