ஐ.ஐ.டி., டெல்லியில் சான்றிதழ் படிப்பு | Kalvimalar - News

ஐ.ஐ.டி., டெல்லியில் சான்றிதழ் படிப்பு

எழுத்தின் அளவு :

ஐ.ஐ.டி., டெல்லியில் பிசினஸ் மேனேஜ்மெண்ட் தொடர்பான குறுகிய கால சான்றிதழ் படிப்புகளுக்கான, மாணவர் சேர்க்கை அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

படிப்பின் முக்கிய பிரிவுகள்:
* இண்ட்ரடக்சன் டூ மேனேஜ்மெண்ட்
* கிரியேட்டிவ் புராப்லம் சால்விங்
* மேனேஜ்மெண்ட் இன்பர்மேஷன் சிஸ்டம்
* பினான்சியல் அக்கவுண்டிங் இன் டிசிஷன் மேக்கிங்
* மார்க்கெட்டிங் மேனேஜ்மெண்ட்
* மேனேஜிங் ஆப்பரேஷன்ஸ்
* டிஜிட்டல் மார்க்கெட்டிங்
* ஆர்கனைசேஷன் அண்ட் பீப்புள் மேனேஜ்மெண்ட்

தகுதிகள்:
மேனேஜ்மெண்ட் சார்ந்த படிப்புகளில் பட்டம் பெற்றவர்கள் மற்றும் அந்தத் துறையில் பணிபுரிபவராக இருக்க வேண்டும் அல்லது துறை சார்ந்த கார்ப்பரேட் பணியாளர்கள், பட்டதாரிகள், தொழில் முனைவோர், ஆய்வாளர் போன்றவர்களும் இந்த குறுகிய கால சான்றிதழ் படிப்புகளுக்கு விண்ணப்பிக்கலாம்.

சான்றிதழ் படிப்பு பற்றிய விவரம்:
ஜூன் 2 முதல் ஆகஸ்ட் 5 வரையிலான இரண்டு மாதகால அளவு கொண்ட இந்தப் படிப்புகளுக்கு மொத்தம் 90 மணி நேரம் வகுப்புகள் நடத்தப்படும். சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் மட்டுமே வகுப்புகள் இருக்கும்.

விண்ணப்பிக்கக் கடைசி நாள்: மே 24

எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல்: மே 26

விபரங்களுக்கு: http://ccbm-iitd.com/

Search this Site
dinamalar-advertisement-tariff-2018

மேலும்

Copyright © 2018 www.kalvimalar.com.All rights reserved | Contact us