ஐ.எம்.யூ.சி.இ.டி., தேர்வு | Kalvimalar - News

ஐ.எம்.யூ.சி.இ.டி., தேர்வு

எழுத்தின் அளவு :

கடல் சார்ந்த இளநிலை மற்றும் முதுநிலை படிப்புகளில் சேர்க்கை பெற விரும்பும் மாணவர்களுக்காகத் தேசிய அளவில் நடத்தப்படும் பொது நுழைவுத் தேர்வான ஐ.எம்.யூ சி.இ.டி., பற்றிய அறிவிப்பை இந்தியன் மெரிடைம் யூனிவர்சிட்டி வெளியிட்டுள்ளது.

படிப்புகள்: பி.எஸ்சி., - பி.டெக்., - டி.என்.எஸ்., - எம்.பி.ஏ., - எம்.டெக்.,

தகுதி: பள்ளிப் படிப்பில் குறைந்தது 50 சதவீத மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும். திருமணம் ஆகாதவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க முடியும்.

வயது வரம்பு: 18 வயது முதல் 26 வயதிறுகுள் இருத்தல் வேண்டும். எஸ்.சி., - எஸ்.டி., பிரிவினருக்கு ஐந்து ஆண்டுகள் விலக்கு உண்டு.

சேர்க்கை முறை: உடற்தகுதி சான்றிதழும், கண்பார்வை குறைபாடுகள் இல்லை என்பதற்கான சான்றிதழும் இருந்தால் மட்டுமே சேர்க்கை பெற முடியும். இது கணினி வழி தேர்வாக மட்டுமே நடைபெறும். ஒரு கேள்விக்கு ஒரு மதிப்பெண் வீதம் 200 கேள்விகள் பல்வேறு பாடப் பிரிவுகளில் இருந்து கேட்கப்படும். இதில் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு ஆன்லைன் கலந்தாய்வு மூலம் கல்வி நிறுவனங்கள் ஒதுக்கப்படும்.

விண்ணப்பிக்கக் கடைசி நாள்: மே 11

தேர்வு நடைபெறும் நாள்: ஜூன் 1

விபரங்களுக்கு: www.imu.edu.in

Search this Site

Copyright © 2018 www.kalvimalar.com.All rights reserved | Contact us