மேலாண்மை படிக்க ‘மேட்’ | Kalvimalar - News

மேலாண்மை படிக்க ‘மேட்’

எழுத்தின் அளவு :

நாடு முழுவதிலும் உள்ள 600க்கும் மேற்பட்ட வணிக கல்வி நிறுவனங்களில் சேர்க்கை பெறுவதற்காக நடத்தப்படும், மேனேஜ்மென்ட் ஆப்டிடியூட் டெஸ்ட் (மேட்) பற்றிய அறிவிப்பை அகில இந்திய மேலாண்மைக் கழகம் (ஏ.ஐ.எம்.ஏ.,) வெளியிட்டுள்ளது.

படிப்புகள்: எம்.பி.ஏ., பி.ஜி.டி.எம்., மற்றும் பிற மேலாண்மை படிப்புகள்.

தகுதி: ஏதேனும் ஒரு துறையில் இளநிலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும். இறுதியாண்டு மாணவர்களும் விண்ணப்பிக்கலாம்.

தேர்வு முறை: விண்ணப்பிக்க விரும்பும் மாணவர்கள், ஏ.ஐ.எம்.ஏ.,-வின் அதிகார பூர்வ இணையதளத்தில் கேட்கப்படும் விபரங்களை பதிவு செய்ய வேண்டும். இரண்டு வகையில் இந்த தேர்வு நடத்தப்படுகிறது. தாள் வழி தேர்வு மற்றும் கம்ப்யூட்டர் வழி தேர்வு, இதில் ஏதேனும் ஒன்றையோ அல்லது இரண்டையுமே நீங்கள் தேர்வு செய்யலாம்.

விண்ணப்பிக்க கடைசி நாள்: ஏப்ரல் 27

தேர்வு விபரம் 

தாள் வழி தேர்வு: மே 6.

கம்பியூட்டர் வழி தேர்வு: மே 20 முதல் ஞாயிற்றுக்கிழமைகளில் நடைபெறும்.

விபரங்களுக்கு: https://aima.in

Search this Site

மேலும்

Copyright © 2018 www.kalvimalar.com.All rights reserved | Contact us