இன்ஜினியரிங் அட்மிஷன் | Kalvimalar - News

இன்ஜினியரிங் அட்மிஷன்

எழுத்தின் அளவு :

மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சகத்தின் கீழ், புனேவில் செயல்படும், ‘டிபன்ஸ் இன்ஸ்டிடியூட் ஆப் அட்வான்ஸ்ட் டெக்னாலஜி’ எனும் கல்வி நிறுவனத்தில் முதுநிலை படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது.

படிப்புகள்
எம்.டெக்., - ஏரோஸ்பேஸ் இன்ஜினியரிங், மாடலிங் அண்ட் ஸ்டிமுலேஷன், கம்ப்யூட்டர் சயின்ஸ் அண்ட் இன்ஜினியரிங், எலக்ட்ரானிக்ஸ் அண்ட் கம்யூனிகேஷன் இன்ஜினியரிங், டெக்னாலஜி மேனேஜ்மென்ட், மெட்டீரியல்ஸ் இன்ஜினியரிங், கோரொஷன் டெக்னாலஜி, மெக்கானிக்கல் இன்ஜினியரிங், சென்சார் டெக்னாலஜி, லேசர் அண்ட் எலக்ட்ரோ ஆப்டிக்ஸ், மெட்டீரியல் சயின்ஸ் அண்ட் கெமிக்கல் டெக்னாலஜி, ஆப்தோ எலக்ட்ரானிக்ஸ் அண்ட் கம்யூனிகேஷன் சிஸ்டம்ஸ்.

எம்.எஸ்சி., - புட் டெக்னாலஜி
பி.ஜி., டிப்ளமா - பயர் இன்ஜினியரிங் அண்ட் இன்டெக்ரேட்டர்டு சேப்டி
மாஸ்டர் ஆப் சயின்ஸ் (எம்.எஸ்.,)

தகுதிகள்: குறைந்த 55 சதவீத மதிப்பெண்களுடன், இளநிலை பொறியியல் அல்லது தொழில்நுட்ப பட்டம் பெற்றிருக்க வேண்டும் அல்லது முதுநிலை அறிவியல் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

வயதுவரம்பு: அதிகபட்சம் 26 வயதிற்குள் இருத்தல் அவசியம். எனினும், மத்திய அரசின் விதிமுறைப்படி, குறிப்பிட்ட பிரிவினர்களுக்கு விதிவிலக்கு உண்டு.

உதவித்தொகை: தகுதியுள்ள மாணவர்களுக்கு மாதம் 12,400 ரூபாய் வழங்கப்படும்.

விண்ணப்பிக்க கடைசி நாள்: ஏப்ரல் 13

விபரங்களுக்கு: www.diat.ac.in

Search this Site

மேலும்

Copyright © 2018 www.kalvimalar.com.All rights reserved | Contact us