காமராஜ் பல்கலையில் அட்மிஷன் | Kalvimalar - News

காமராஜ் பல்கலையில் அட்மிஷன்

எழுத்தின் அளவு :

மதுரை காமராஜ் பல்கலைக்கழகத்தில், இரண்டு ஆண்டு முழுநேர முதுநிலைப் பட்டப்படிப்புகளுக்கான, மாணவர் சேர்க்கை அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

படிப்புகள்
எம்.எஸ்சி.,-கணிதம் / இயற்பியல்/ வேதியியல் / புவியியல் / கணினி அறிவியல் / சுற்றுச்சூழல் அறிவியல் / எர்த் ரிமோட் சென்சிங் அண்ட் ஜியோ இன்பர்மேஷன் டெக்னாலஜி / கம்ப்யூடேஷனல் பயோலஜி / பயோடெக்னாலஜி.

எம்.ஏ.,-தமிழ் / ஆங்கிலம் /மொழியியல்/ மலையாளம் / தெலுங்கு /கன்னடம்/ சமஸ்கிருதம் /பிரஞ்ச் / பொருளியல் / அரசியல் அறிவியல்/சமூகவியல்/ தத்துவவியல் / வரலாறு.

மேலும், எம்.பி.எட்., எம்.எட்., எம்.காம்., எம்.எல்.ஐ.எஸ்சி., எம்.பி.ஏ., எம்.சி.ஏ., மற்றும் பல்வேறு படிப்புகள்.

தகுதி மற்றும் சேர்க்கை: இளநிலை பட்டப்படிப்பில் தேர்ச்சி பெற்ற அல்லது இறுதியாண்டு படிக்கும் மாணவர்கள் விண்ணப்பிக்கலாம். சில படிப்புகளுக்கு துறை சார்ந்த பட்டப்படிப்பும், குறிப்பிட்ட மதிப்பெண்களும் அவசியம். மேலும், சில குறிப்பிட்ட படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை நுழைவுத் தேர்வின் அடிப்படையில் நடைபெறுகிறது.

விண்ணப்பிக்க கடைசி நாள்: மார்ச் 9

விபரங்களுக்கு: http://mkuniversity.org/

Search this Site
dinamalar-advertisement-tariff-2018

மேலும்

Copyright © 2018 www.kalvimalar.com.All rights reserved | Contact us