புட்வேர் டிசைனிங் படிப்புகள் | Kalvimalar - News

புட்வேர் டிசைனிங் படிப்புகள்

எழுத்தின் அளவு :

மத்திய அரசால், தேசிய முக்கியத்துவம் வாய்ந்த கல்வி நிறுவனமாக அறிவிக்கப்பட்டுள்ள, எப்.டி.டி.ஐ., எனும் ‘புட்வேர் டிசைன் அண்ட் டெவலப்மென்ட் இன்ஸ்டிடியூட்’-ல் மாணவர் சேர்க்கைக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

நொய்டா, சென்னை, கொல்கத்தா, குஜராத், லக்னோ, ரொடக், சிந்த்வாரா, ஜோத்பூர், குணா, பாட்னா, ஹைதராபாத் மற்றும் சண்டிகர் ஆகிய பகுதிகளில் எப்.டி.டி.ஐ., கல்வி வளாகம் உள்ளது.

வழங்கப்படும் படிப்புகள்
பாச்சுலர் ஆப் டிசைன் (புட்வேர் டிசைன் அண்ட் புரொடக்ஷன்) - 4 ஆண்டுகள்
பாச்சுலர் ஆப் டிசைன் (லெதர் கூட்ஸ் அண்ட் ஆக்சசரிஸ் டிசைன்) - 4 ஆண்டுகள்
பாச்சுலர் ஆப் டிசைன் (ரீடெயில் அண்ட் பேஷன் மர்சன்டைஸ்) - 4 ஆண்டுகள்
பாச்சுலர் ஆப் டிசைன் (பேஷன் டிசைன்) - 4 ஆண்டுகள்
மாஸ்டர் ஆப் டிசைன் (புட்வேர் டிசைன் அண்ட் புரொடக்ஷன்) - 2 ஆண்டுகள்
எம்.பி.ஏ., (ரீடெயில் அண்ட்  பேஷன் மர்சன்டைஸ்) - 2 ஆண்டுகள்
மாஸ்டர் ஆப் டிசைன் (கேட்) - 2 ஆண்டுகள்

தகுதிகள்: படிப்பைப் பொறுத்து, கல்வித் தகுதிகள் மாறுபடும்.

சேர்க்கை முறை: எப்.டி.டி.ஐ., கல்வி நிறுவனத்தால் நடத்தப்படும் ஏ.ஐ.எஸ்.டி., எனும் பிரத்யேக நுழைவுத் தேர்வு மூலம் மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது.

விண்ணப்பிக்க கடைசி நாள்: ஏப்ரல் 2

நுழைவுத் தேர்வு நடைபெறும் நாட்கள்: ஏப்ரல் 27-29

விபரங்களுக்கு: www.fddiindia.com

Search this Site
dinamalar-advertisement-tariff-2018

Copyright © 2018 www.kalvimalar.com.All rights reserved | Contact us