புள்ளியியல் நிறுவனத்தில் அட்மிஷன் | Kalvimalar - News

புள்ளியியல் நிறுவனத்தில் அட்மிஷன்

எழுத்தின் அளவு :

தேசிய முக்கியத்துவம் வாய்ந்த கல்வி நிறுவனம் என்ற பெருமை பெற்ற, ஐ.எஸ்.ஐ., எனும் இந்திய புள்ளியியல் கல்வி நிறுவனத்தில் மாணவர் சேர்க்கைக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

கொல்கத்தாவை தலைமையிடமாகக் கொண்ட இக்கல்வி நிறுவனம், டில்லி, பெங்களூரு, சென்னை மற்றும் தெஸ்பூர் ஆகிய நகரங்களிலும் கல்வி வளாகத்தைப் பெற்றுள்ளது.

வழங்கப்படும் படிப்புகள்
பாச்சுலர் ஆப் ஸ்டேடிஸ்டிக்ஸ் (ஹானர்ஸ்) - 3 ஆண்டுகள்
பாச்சுலர் ஆப் மேதெமெடிக்ஸ் (ஹானர்ஸ்)- 3 ஆண்டுகள்
மாஸ்டர் ஆப் மேதெமெடிக்ஸ் - 2 ஆண்டுகள்
மாஸ்டர் ஆப் சயின்ஸ் இன் குவான்டிடெடிவ் எக்னாமிக்ஸ் - 2 ஆண்டுகள்
மாஸ்டர் ஆப் ஸ்டேடிஸ்டிக்ஸ் - 2 ஆண்டுகள்
மாஸ்டர் ஆப் சயின்ஸ் இன் குவாலிட்டி மேனேஜ்மென்ட் சயின்ஸ்- 2 ஆண்டுகள்
மாஸ்டர் ஆப் சயின்ஸ் இன் லைப்ரரி அண்ட் இன்பர்மேஷன் சயின்ஸ் - 2 ஆண்டுகள்
மாஸ்டர் ஆப் டெக்னால்ஜி இன் கம்ப்யூட்டர் சயின்ஸ் - 2 ஆண்டுகள்
மாஸ்டர் ஆப் டெக்னாலஜி இன் கிரிப்டோலஜி அண்ட் செக்யூரிட்டி
மாஸ்டர் ஆப் டெக்னாலஜி இன் குவாலிட்டி, ரிலையபில்ல்டி அண்ட் ஆப்ரேஷன்ஸ் - 2 ஆண்டுகள்
பி.ஜி. டிப்ளமா இன் ஸ்டேடிஸ்டிகல் மெதெட்ஸ் அண்ட் அனலடிக்ஸ் - ஓர் ஆண்டு
பி.ஜி. டிப்ளமா இன் கம்ப்யூட்டர் அப்ளிகேஷன்ஸ் - ஓர் ஆண்டு
ஜூனியர் ரிசர்ச் பெலோஷிப் (ஜே.ஆர்.எப்.,)

தகுதிகள்: படிப்பைப் பொறுத்து, கல்வித் தகுதிகள் மாறுபடும்.

சேர்க்கை முறை: ஐ.எஸ்.ஐ., கல்வி நிறுவனத்தால் நடத்தப்படும் நுழைவுத் தேர்வு அல்லது அதற்கு நிகரான தேர்வுகளில் பெற்ற மதிப்பெண் மற்றும் நேர்முகத் தேர்வு அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது. ஆன்லைனில் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க கடைசி நாள்: மார்ச் 9

நுழைவுத் தேர்வு நாள்: மே 13

விபரங்களுக்கு: www.isical.ac.in

Search this Site
dinamalar-advertisement-tariff-2018

மேலும்

Copyright © 2018 www.kalvimalar.com.All rights reserved | Contact us