மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு உதவித்தொகை | Kalvimalar - News

மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு உதவித்தொகை

எழுத்தின் அளவு :

மத்திய அரசின் சார்பில் வழங்கப்படும் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கான உதவித்தொகை அறிவிப்பை, தேசிய ஊனமுற்றோர் நிதி மற்றும் மேம்பாடு கழகம் என்.எச்.எப்.டி.சி., வெளியிட்டுள்ளது.

எண்ணிக்கை: மொத்தம் 2,500 மற்றும் பெண்களுக்கு 30 சதவீதம் இடம் ஒதுக்கப்பட்டுள்ளது.

கல்வித்தகுதி: தொழில்நுட்பக் கல்வி பிரிவில், இளநிலை அல்லது முதுநிலை பட்டப்படிப்பில் படித்து கொண்டிருக்க வேண்டும்.

உதவித்தொகை: இளநிலை தொழிற்கல்வி மாணவர்களுக்கு மாதம் 2,500 ரூபாய் மற்றும் புத்தகம்/ஸ்டேஷனரிக்கு ஆண்டுக்கு 6 ஆயிரம் ரூபாய். முதுநிலை தொழிற்கல்வி மாணவர்களுக்கு, மாதம் 3 ஆயிரம் ரூபாய் மற்றும் புத்தகம்/ஸ்டேஷனரிக்கு ஆண்டுக்கு 10 ஆயிரம் ரூபாய்.

குறிப்பு: பெற்றோர் அல்லது பாதுகாவலரின் ஆண்டு வருமானம் ரூ.3 லட்சத்திற்கு மிகாமல் இருத்தல் வேண்டும்.

விண்ணப்பிக்க கடைசி நாள்: ஜூன் 30

விபரங்களுக்கு: www.nhfdc.nic.in

Search this Site
dinamalar-advertisement-tariff-2018

மேலும்

Copyright © 2018 www.kalvimalar.com.All rights reserved | Contact us