ஆசிரியர் படிப்பு | Kalvimalar - News

ஆசிரியர் படிப்பு

எழுத்தின் அளவு :

கோவை பாரதியார் பல்கலைக்கழகம், தொலைநிலை கல்வி முறையில் 2018-2020ம் கல்வியாண்டிற்கான பி.எட்., படிப்பில் மாணவர் சேர்க்கை அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

தகுதிகள்: தமிழ், ஆங்கிலம், வரலாறு, புவியியல், கணிதம், இயற்பியல், வேதியியல், உயிரியல், விலங்கியல் மற்றும் கணினி அறிவியல் போன்ற ஏதேனும் ஒரு துறை பிரிவில், இளநிலை அல்லது முதுநிலை பட்டப்படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

முதுநிலை பட்டப்படிப்பில் பொருளாதாரம் மற்றும் வணிகவியல் போன்ற பாடங்களை முதன்மை பாடமாக பயின்றவர்கள், இளநிலை பட்டப்படிப்பிலும் அதே பாடங்களை முதன்மை பாடமாக பயின்று இருக்க வேண்டும். இரண்டு ஆண்டு ஆசிரியர் பணி அனுபவமுள்ள, தற்போது பணியில் உள்ள பள்ளி ஆசிரியர்கள் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க கடைசி நாள்: ஏப்ரல் 30

விபரங்களுக்கு: www.b-u.ac.in

Search this Site

Copyright © 2018 www.kalvimalar.com.All rights reserved | Contact us