‘நெஸ்ட்’ நுழைவுத்தேர்வு | Kalvimalar - News

‘நெஸ்ட்’ நுழைவுத்தேர்வு

எழுத்தின் அளவு :

இந்திய அணுசக்தித் துறையின் கீழ் புவனேஸ்வரில் செயல்படும், ‘நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆப் சயின்ஸ் எஜுகேஷன் அண்ட் ரிசர்ச்’ மற்றும் மும்பை பல்கலைக்கழகத்தின் ‘சென்டர் பார் எக்ஸலன்ஸ் இன் பேசிக் சயின்ஸ்’, உள்ளிட்ட கல்வி நிறுவனங்களில் சேர்க்கை பெறுவதற்கான ‘நெஸ்ட்’ நுழைவுத்தேர்வு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

படிப்புகள்: இயற்பியல், வேதியியல், கணிதம் மற்றும் உயிரியல் ஆகிய பிரிவுகளில், ஒருங்கிணைந்த எம்.எஸ்சி., படிப்பு (ஐந்து ஆண்டுகள்)
வயது வரம்பு: ஆகஸ்ட் 1, 1998ம் தேதி அன்று அல்லது அதற்குப் பின் பிறந்தவர்கள் விண்ணப்பிக்கலாம். இட ஒதுக்கீட்டின் கீழ் வயது வரம்பு தளர்வும் உண்டு.

தகுதிகள்: பிளஸ் 2வில் அறிவியல் பாடத்தை முதன்மை பாடமாக பயின்று, 60 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். எஸ்.சி., மற்றும் எஸ்.டி., மாணவர்கள் 55 சதவீத மதிப்பெண்கள் பெற்றிருந்தால் போதுமானது.

தேர்வு முறை: கணினி வழி அடிப்படையிலான ’அப்ஜெக்டிவ்’ எழுத்து தேர்வு மூலம், ‘மெரிட்’ முறையில்  தகுதியான மாணவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

தேர்வு நாள்: ஜூன் 2

விண்ணப்பிக்க கடைசி நாள்: மார்ச் 5
 
விபரங்களுக்கு: www.nestexam.in

Search this Site
dinamalar-advertisement-tariff-2018

Copyright © 2018 www.kalvimalar.com.All rights reserved | Contact us