நிம்ஹான்ஸில் மாணவர் சேர்க்கை | Kalvimalar - News

நிம்ஹான்ஸில் மாணவர் சேர்க்கை

எழுத்தின் அளவு :

பெங்களூருவில் உள்ள ’நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆப் மென்டல் ஹெல்த் அண்ட் நியூரோ சயின்ஸ்’, மாணவர் சேர்க்கை அறிவிப்பை வெளியிட்டுள்ளது!

படிப்புகள்:
எம்.எஸ்சி., -சைக்காலஜி நர்சிங், பயோ ஸ்டேடிஸ்டிக்ஸ் மற்றும் பப்ளிக் ஹெல்த். 
எம்.பில்., -மருத்துவ உளவியல், உளவியல் சமூக வேலை, நரம்பு இயங்கியல், உயிரி இயற்பியல், நரம்பியல் அறிவியல்.
பிஎச்.டி., -மருத்துவ உளவியல், பேச்சு நோய்க்குறியியல், உளவியல் சமூக வேலை, நரம்பு இயங்கியல், மனநல மறுவாழ்வு, உயிரி இயற்பியல், நரம்பியல் அறிவியல்.
சூப்பர் ஸ்பெஷாலிட்டி படிப்புகள் - நரம்பியல், குழந்தை மற்றும் இளம்பருவ உளவியலாளர், மனநல மருத்துவர், நரம்பு மயக்க மருந்தியல், முதியோர் உளவியலாளர். இவைதவிர டிப்ளமோ மற்றும் போஸ்டு டாக்டோரல் படிப்புகளும் உண்டு.

தகுதிகள்: விண்ணப்பிக்கும் பட்டப்படிப்புகளுக்கு ஏற்ற துறையில் இளநிலை அல்லது முதுநிலை படிப்பில் குறைந்தது 55 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

சேர்க்கை முறை: ஆன்லைன் எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வு மற்றும் கலந்தாய்வு அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடைபெறும்.

விண்ணப்பிக்க கடைசி நாள்: பிப்., 4

விபரங்களுக்கு: www.nimhans.ac.in

Search this Site
dinamalar-advertisement-tariff-2018

Copyright © 2018 www.kalvimalar.com.All rights reserved | Contact us