ஐ.ஐ.பி.எம்.,-ல் முதுநிலை படிப்புகள் | Kalvimalar - News

ஐ.ஐ.பி.எம்.,-ல் முதுநிலை படிப்புகள்

எழுத்தின் அளவு :

மத்திய அரசின்கீழ் தன்னாட்சி கல்வி நிறுவனமாக பெங்களூருவில் செயல்படும், நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆப் பிளான்டேஷன் மேனேஜ்மெண்ட், போஸ்ட் கிராஜூவேட் டிப்ளமோ இன் மேனேஜ்மெண்ட் (பி.ஜி.டி.எம்.,) பட்டப்படிப்பில் மாணவர் சேர்க்கை அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

படிப்புகள்: போஸ்ட் கிராஜூவேட் டிப்ளமோ இன் மேனேஜ்மெண்ட் - அக்ரிபிசினஸ் அண்ட் பிளான்டேஷன் மேனேஜ்மெண்ட் (2 ஆண்டுகள்)  மற்றும் போஸ்ட் கிராஜூவேட் டிப்ளமோ இன் மேனேஜ்மெண்ட் - புட் புராசசிங் அண்ட் பிசினஸ் மேனேஜ்மெண்ட் (2 ஆண்டுகள்).

தகுதி: அங்கீகரிக்கப்பட்ட பல்கலை அல்லது கல்லூரிகளில் ஏதேனும் ஒரு துறையில் இளநிலை பட்டப்படிப்பில் 50 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். எஸ்.சி., எஸ்.டி., பிரிவினர் 45 சதவீத மதிப்பெண்கள் பெற்றிருந்தால் போதுமானது. கேட், மேட், சிமேட், ஏ.டி.எம்.ஏ., போன்ற ஏதேனும் ஒரு தகுதித் தேர்வில் மாணவர்கள் தேர்ச்சி பெற்றிருப்பதும் அவசியம்.

சேர்க்கை முறை: தேர்வு மதிப்பெண்கள், எழுத்து திறன், குழு விவாதம் மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியான மாணவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்க கடைசி நாள்: ஜனவரி 31

விபரங்களுக்கு: www.iipmb.edu.in

Search this Site
dinamalar-advertisement-tariff-2018

மேலும்

Copyright © 2018 www.kalvimalar.com.All rights reserved | Contact us