டாடா இன்ஸ்டிடியுட்-ல் அட்மிஷன் | Kalvimalar - News

டாடா இன்ஸ்டிடியுட்-ல் அட்மிஷன்

எழுத்தின் அளவு :

முப்பையில் உள்ள டாடா சமூக அறிவியல் கல்வி நிறுவனத்தில், ஒருங்கிணைந்த எம்.பில்.,-பிஎச்.டி., மற்றும் நேரடி பிஎச்.டி., படிப்பில் 2018ம் ஆண்டிற்கான மாணவர் சேர்க்கை அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

படிப்புகள்: வாழ்வாதார ஆய்வு, பொது சுகாதாரம், சுகாதார மேலாண்மை அமைப்பு, மேலாண்மை மற்றும் தொழிலாளர் ஆய்வுகள், சமூக பணி, பேரிடர் மேலாண்மை, பெண்கள் ஆய்வு, கல்வியியல், மேம்பாடு ஆய்வுகள், சமூக அறிவியல், ஊடகங்கள் மற்றும் கலாச்சார ஆய்வுகள்.

தகுதிகள்: அங்கீகரிக்கப்பட்ட பல்கலை அல்லது கல்லூரிகளில், விண்ணப்பிக்கும் படிப்புக்கு ஏற்றத் துறையில் 55 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். எஸ்.சி., எஸ்.டி., ஓ.பி.சி., மாணவர்கள் 50 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருந்தால் போதுமானது.

தேர்வு முறை: ரீசர்ச் அப்டிடியூட் டெஸ்ட் (ஆர்.ஏ.டி.,) எனும் எழுத்து தேர்வு மூலம் தகுதியானவர் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்க கடைசி நாள்: ஜனவரி 13, 2018

விபரங்களுக்கு: www.tiss.edu

Search this Site
dinamalar-advertisement-tariff-2018

Copyright © 2018 www.kalvimalar.com.All rights reserved | Contact us