தொழிற்கல்வி படிப்புகளுக்கு உதவித்தொகை | Kalvimalar - News

தொழிற்கல்வி படிப்புகளுக்கு உதவித்தொகை

எழுத்தின் அளவு :

மத்திய அரசின் ’பிரகதி’ மற்றும் ’சாக் ஷாம்’ திட்டத்தின் கீழ், 5 ஆயிரம் பேருக்கு உதவித்தொகை வழங்குகிறது, அகில இந்திய தொழில்நுட்பக் கல்வி குழு (ஏ.ஐ.சி.டி.இ.,).

’பிரகதி’ திட்டம் -  நடப்பு கல்வியாண்டில் பி.இ., பி.டெக்., டிப்ளமோ போன்ற ஏதேனும் ஒரு தொழிற்கல்வி படிப்பை, படித்துக் கொண்டிருக்கும் மாணவியர் விண்ணப்பிக்கலாம்.

’சாக் ஷாம்’ திட்டம்-  பி.இ., பி.டெக்., டிப்ளமோ போன்ற ஏதேனும் ஒரு தொழிற்கல்வி படிப்பை, படித்துக் கொண்டிருக்கும் மாற்றுத்திறனாளி மாணவ மாணவிகள்  விண்ணப்பிக்கலாம்.

தகுதி: பெற்றோரின் ஆண்டு வருமானம், 8 லட்சம் ரூபாய்க்கு மிகாமல் இருக்க வேண்டும்.

உதவித்தொகை: மாதத்திற்கு 2,000ம் ரூபாய் வீதம், ஆண்டுக்கு 30,000ம் ரூபாய்.

விண்ணப்பிக்க கடைசி நாள்: நவம்பர் 30

விபரங்களுக்கு: www.aicte-india.org

Search this Site
dinamalar-advertisement-tariff-2018

மேலும்

Copyright © 2018 www.kalvimalar.com.All rights reserved | Contact us