கடல்சார் படிப்புகள் | Kalvimalar - News

கடல்சார் படிப்புகள்

எழுத்தின் அளவு :

மத்திய அரசின்கீழ் சென்னையில் செயல்பட்டு வரும், இந்திய கடல்சார் பல்கலைக்கழகம், பிஎச்.டி., மற்றும் எம்.எஸ்., பட்டப்படிப்பில் மாணவர் சேர்க்கை அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

பாடப் பிரிவுகள்: கடல் பொறியியல் மற்றும் தொழில்நுட்பம், கடல் ஆய்வு, கடற்படை கட்டுமானம் மற்றும் பெருங்கடல் பொறியியல் மற்றும் கடல்சார் மேலாண்மை.

தகுதிகள்: அங்கீகரிக்கப்பட்ட பல்கலை அல்லது கல்லூரிகளில், மேலே குறிப்பிட்டுள்ள பாடப் பிரிவுகளில் ஏதேனும் ஒன்றில் இளநிலை மற்றும் முதுநிலை பட்டப்படிப்பில் 55 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். எஸ்.சி., மற்றும் எஸ்.டி., மாணவர்கள் 50 சதவீத மதிப்பெண் பெற்றிருந்தால் போதுமானது.

சேர்க்கை முறை: எழுத்துத் தேர்வு, கட்டுரைத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் மாணவர் சேர்க்கை நடைபெறும்.

விண்ணப்பிக்க கடைசி நாள்: நவம்பர் 15

விபரங்களுக்கு: www.imu.edu.in

Advertisement
Search this Site
dinamalar advertisement tariff

மேலும்

Copyright © 2024 www.kalvimalar.com.All rights reserved | Contact us