‘கேட்’ தேர்வு அறிவிப்பு | Kalvimalar - News

‘கேட்’ தேர்வு அறிவிப்பு

எழுத்தின் அளவு :

ஐ.ஐ.டி., கல்வி நிறுவனங்களில், பொறியியல், கட்டடக்கலை, அறிவியல்  மற்றும் தொழில்நுட்பம் போன்ற பிரிவுகளில், முதுநிலை பட்டப்படிப்பில் சேர்க்கை பெற விரும்பும் மாணவர்களுக்கான ‘கேட்’ தகுதித் தேர்வு அறிவிப்பை, ஐ.ஐ.டி., குவஹாத்தி வெளியிட்டுள்ளது.

பல்வேறு பொதுத்துறை நிறுவனங்களில் வேலை பெறவும் இத்தேர்வு உதவுகிறது.

தகுதிகள்: அங்கீகரிக்கப்பட்ட பல்கலை அல்லது கல்லூரிகளில் பொறியியல் மற்றும் தொழில்நுட்பம் ஆகிய துறைகளில் பட்டம் பெற்றவர்கள் அல்லது அறிவியல், கணிதம் மற்றும் புள்ளியியல் ஆகிய துறைகளில் முதுநிலை பட்டம் பெற்றவர்கள் அல்லது ஒருங்கிணைந்த எம்.எஸ்சி., படிப்பில் தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பிக்க கடைசி நாள்: அக்டோபர் 5

விபரங்களுக்கு: http://gate.iitg.ac.in/

Advertisement
Search this Site
dinamalar advertisement tariff

Copyright © 2024 www.kalvimalar.com.All rights reserved | Contact us