முதுநிலை மாணவர் சேர்க்கை | Kalvimalar - News

முதுநிலை மாணவர் சேர்க்கை

எழுத்தின் அளவு :

புதுச்சேரியில் உள்ள ஜவஹர்லால் இன்ஸ்டிடியூட் ஆப் போஸ்ட் கிராஜூவேட் மெடிக்கல் எஜுகேஷன் அண்ட் ரீசர்ச் (ஜிப்மர்), எம்.டி., மற்றும் எம்.எஸ்., படிப்பிற்கான நுழைவுத்தேர்வு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

பிரிவுகள்: எம்.டி., படிப்பில் மயக்க மருந்தியல், உடற்கூற்றியல், உயிர்வேதியியல், சமூக மருத்துவம், பொது மருத்துவம், நுண்ணுயிரியல் உட்பட 19 பிரிவுகள் மற்றும் எம்.எஸ்., படிப்பில் பொது அறுவை சிகிச்சை, மகப்பேறு மருத்துவம், கண்சிகிச்சை உட்பட 5 பிரிவுகள் உள்ளன.

தகுதிகள்: இந்திய மருத்துவ கவுன்சிலால் அங்கீகரிக்கப்பட்ட கல்லூரிகளில் எம்.பி.பி.எஸ்., படிப்பில் 55 சதவீத மதிப்பெண்களுடன்  தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். எஸ்.சி., எஸ்.டி., மாணவர்கள் 50 சதவீத மதிப்பெண்கள் பெற்றிருந்தால் போதுமானது.

சேர்க்கை முறை: எழுத்து தேர்வு மூலம் ‘மெரிட்’ அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடைபெறும்.

தேர்வு நாள்: நவம்பர் 19

விண்ணப்பிக்க கடைசி நாள்: அக்டோபர் 10

விபரங்களுக்கு: www.jipmer.edu.in

Search this Site
dinamalar-advertisement-tariff-2018

மேலும்

Copyright © 2018 www.kalvimalar.com.All rights reserved | Contact us