மாணவர் சேர்க்கை அறிவிப்பு | Kalvimalar - News

மாணவர் சேர்க்கை அறிவிப்பு

எழுத்தின் அளவு :

சென்னை பல்கலையில், சுயநிதி கல்வி முறையில் 2 ஆண்டுகள் கொண்ட எம்.ஏ., மற்றும் எம்.எல்., படிப்புகளில், மாணவர் சேர்க்கை அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

படிப்புகள்: எம்.ஏ., - பரதநாட்டியம், எம்.ஏ.,-ரிதமோலஜி மற்றும் எம்.எல்.,

தகுதிகள்
சர்வதேச சட்டம் மற்றும் அரசியலமைப்பு சட்டம், குற்றவியல் சட்டம், அறிவுசார் சொத்து சட்டம், மனித உரிமைகள் மற்றும் சுற்றுச்சூழல் மற்றும் தொழிலாளர் சட்டம் மற்றும் நிர்வாகச் சட்டம் ஆகிய துறை பிரிவின் கீழ் வழங்கப்படும் எம்.எல்., படிப்புக்கு, மூன்றாடுகள் கொண்ட பி.எல்.,- எல்.எல்.பி., அல்லது ஐந்து ஆண்டுகள் கொண்ட பி.எல்.,- எல்.எல்.பி., பட்டப்படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

பரதநாட்டியம் மற்றும் ரிதமோலஜி படிப்புகளுக்கு சென்னை பல்கலைக்கழகத்தால் அங்கீகரிக்கப்பட்ட ஏதேனும் ஒரு இளநிலை பட்டப்படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். பல்கலைக்கழக விதிமுறையின் படி, பரதநாட்டியம் மற்றும் ரிதம்மோலஜி துறைகளில்  5 ஆண்டுகள் அனுபவமிக்கவர்கள் அல்லது டிப்ளமோ படித்தவர்களும் விண்ணப்பிக்கலாம். குறைந்தபட்சம் 21 வயது நிரம்பியவர்களாகவும் இருக்க வேண்டும்.

விண்ணப்பிக்க கடைசி நாள்: எம்.ஏ., படிப்புகளுக்கு செப்., 29 மற்றும் எம்.எல்., அக்டோபர் 31

விபரங்களுக்கு: www.unom.ac.in

Search this Site

மேலும்

Copyright © 2018 www.kalvimalar.com.All rights reserved | Contact us