விருதுக்கு விண்ணப்பிக்கலாம்! | Kalvimalar - News

விருதுக்கு விண்ணப்பிக்கலாம்!

எழுத்தின் அளவு :

சமூக பணியாற்றும் இளம் வயதினர், ‘குவின்ஸ் யங் லீடர்ஸ் அவார்ட்’ திட்டத்தின் கீழ், விருது பெற விண்ணப்பிக்கலாம்.

விதிமுறைகள்: விண்ணப்பதாரர்கள், 18 முதல் 29 வயதுக்குள் இருத்தல் வேண்டும். தங்களுடைய ஆளுமைத் திறன் பற்றின விரிவான விவரங்கள் மற்றும் தேசிய மற்றும் உள்ளூர் அளவில், சமூக பணியில் மேற்கொண்ட செயல் நடைமுறை சாதனைகளை தகுந்த ஆதாரங்களுடன் சமர்ப்பிக்க வேண்டும்.

விருது பெற்றவர்களுக்கு, தலைமைத்துவம், சந்தைப்படுத்தல், மேலாண்மை மற்றும் தொழில் முனைவோர் ஆகிய பிரிவில் ஆன்லைன் பயிற்சி வகுப்புகளில் பங்குபெறலாம். மேலும், ஒரு வாரம் இங்கிலாந்தில் செயல்முறை பயிற்சிகளும் வழங்கப்பட உள்ளன.

விண்ணப்பிக்க கடைசி நாள்: ஆகஸ்ட் 21

விபரங்களுக்கு: www.queensyoungleaders.com

Search this Site

மேலும்

Copyright © 2018 www.kalvimalar.com.All rights reserved | Contact us