மேலாண்மை நுழைவுத் தேர்வு | Kalvimalar - News

மேலாண்மை நுழைவுத் தேர்வு

எழுத்தின் அளவு :

நாட்டில் உள்ள பல்வேறு கல்வி நிறுவனங்களில், எம்.பி.ஏ., பி.ஜி.டி.எம்., போன்ற மேலாண்மை பட்டப் படிப்புகளில் சேர்வதற்கான, ‘மேட்’ எனும் பொது நுழைவுத் தேர்வு அறிவிப்பை, அகில இந்திய மேனேஜ்மென்ட் அசோசியேஷன் வெளியிட்டுள்ளது.

தகுதிகள்: அங்கீகரிக்கப்பட்ட பல்கலை அல்லது கல்லூரிகளில், ஏதேனும் ஒரு துறையில் இளநிலை பட்டப் படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இளநிலை பட்டப்படிப்பில் கல்வி இறுதியாண்டுபடிக்கும் மாணவர்களும் இத்தேர்வுக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

தேர்வு முறை: எழுத்து மற்றும் கணினி ஆகிய இரண்டு முறைகளில் தேர்வு நடைபெறும். மாணவர்கள் அவர்களது விருப்பத்திற்கு ஏற்ப ஏதேனும் ஒரு  முறையை தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம்.

விண்ணப்பிக்க கடைசி நாள்: ஆகஸ்ட் 25

விபரங்களுக்கு: www.aima.in

Search this Site

மேலும்

Copyright © 2018 www.kalvimalar.com.All rights reserved | Contact us