நேஷனல் ஸ்காலர்ஷிப் தேர்வு | Kalvimalar - News

நேஷனல் ஸ்காலர்ஷிப் தேர்வு

எழுத்தின் அளவு :

பிரதிபா கல்வி அறக்கட்டளையின் கீழ் செயல்படும் ‘நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆப் கேரியர் எஜூகேஷன்’ நடத்தும் நேஷனல் ஸ்காலர்ஷிப் தேர்வு அறிவிப்பு!

தகுதிகள்: எஸ்.எஸ்.சி., ஐ.சி.எஸ்.இ., சி.பி.எஸ்.சி., போன்ற ஏதேனும் ஒரு கல்வி வாரியத்தின் கீழ் 5ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை பயிலும் மாணவ, மாணவிகள், அங்கீகரிக்கப்பட்ட பல்கலை அல்லது கல்லூரிகளில் ஏதேனும் ஒரு துறையில் இளநிலை பட்டப்படிப்பு அல்லது டிப்ளமோ படிக்கும் மாணவ, மாணவியர் இத்தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம்.

தேர்வு முறை: ஆன்லைனில் ‘அப்ஜெக்டிவ்’ அடிப்படையிலான எழுத்து தேர்வு மூலம் தகுதியான மாணவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

எழுத்துத் தேர்வு பகுதிகள்: பொது அறிவு, கணிதம் மற்றும் சமூக அறிவியல்.

விண்ணப்பிக்க கடைசி நாள்: செப்டம்பர் 30

விபரங்களுக்கு: www.niceedu.org

Search this Site

மேலும்

Copyright © 2018 www.kalvimalar.com.All rights reserved | Contact us