உதவித்தொகை அறிவிப்பு | Kalvimalar - News

உதவித்தொகை அறிவிப்பு

எழுத்தின் அளவு :

மத்திய சிறுபான்மை அமைச்சகம், பொருளாதாரத்தில் பின்தங்கிய சிறுபான்மை மாணவ, மாணவிகளுக்கான உதவித்தொகை அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

பிரி மெட்ரிக் ஸ்காலர்ஷிப்
தகுதிகள்: அரசு அல்லது தனியார் பள்ளிகளில், 1 முதல் 10ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்கள் இந்த உதவித்தொகை திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்கலாம். முழு ஆண்டு தேர்வில் 50 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். பெற்றோர்களின் ஆண்டு வருமானம் ரூபாய் 1 லட்சத்திற்கு மிகாமல் இருத்தல் வேண்டும்.

உதவித்தொகை: மாணவர் சேர்க்கை கட்டணம், கல்வி கட்டணம் மற்றும் பராமரிப்பு கட்டணம்.

போஸ்ட் மெட்ரிக் ஸ்காலர்ஷிப்
தகுதிகள்:
அரசு அல்லது தனியார் கல்வி நிறுவனங்களில், 11ம் வகுப்பு முதல் இளநிலை, முதுநிலை மற்றும் ஆராய்ச்சி பட்டப் படிப்பு வரை படிக்கும், மாணவர்கள் இந்த உதவித்தொகைக்கு விண்ணப்பிக்கலாம். 50 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். பெற்றோரின் ஆண்டு வருமானம் 2 லட்சத்திற்கு மிகாமல் இருத்தல் வேண்டும்.

உதவித்தொகை:
11ம் மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு சேர்க்கை கட்டணம் ஆண்டுக்கு ரூபாய் 7 ஆயிரம் மற்றும் கல்வி கட்டணம் ஆண்டுக்கு ரூபாய் 10 ஆயிரம்.
இளநிலை மற்றும் முதுநிலை மாணவர்களுக்கு சேர்க்கை மற்றும் கல்வி கட்டணம் ஆண்டுக்கு ரூபாய் 3 ஆயிரம். எம்.பில்., அல்லது பி.எச்டி., படிக்கும் மாணவர்களுக்கு மாதம் ரூபாய் ஆயிரத்து 200 வழங்கப்படும்.

மெரிட் கம் ஸ்காலர்ஷிப்
தொழில்முறை அல்லது தொழில்நுட்ப பட்டப்படிப்பில் இளநிலை மற்றும் முதுநிலை படிக்கும் மாணவர்கள் இந்த உதவித்தொகைக்கு விண்ணப்பிக்கலாம்.

தகுதிகள்: மேல்நிலை மற்றும் பட்டப்படிப்பில் 50 சதவீத மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். பெற்றோரின் ஆண்டு வருமானம் 2.5 லட்சத்திற்கு மிகாமல் இருத்தல் வேண்டும். உதவித்தொகை பெற ஆதார் எண் கட்டாயம் வேண்டும்.

உதவித்தொகை: ஆண்டுக்கு ரூபாய் 25 ஆயிரத்தில் இருந்து 30 ஆயிரம் வரை.

குறிப்பு: மாணவியருக்கு 30 சதவீத ஒதுக்கீடு உண்டு.

விண்ணப்பிக்க கடைசி நாள்: அனைத்து உதவித்தொகைகளுக்கும் ஆகஸ்ட் 30.

விபரங்களுக்கு: http://scholarships.gov.in/

Search this Site

மேலும்

Copyright © 2018 www.kalvimalar.com.All rights reserved | Contact us