என்.ஐ.எப்.டி.இ.எம்.,ல் மாணவர் சேர்க்கை | Kalvimalar - News

என்.ஐ.எப்.டி.இ.எம்.,ல் மாணவர் சேர்க்கை

எழுத்தின் அளவு :

மத்திய அரசின் கீழ் தன்னாட்சி கல்வி நிறுவனமாக செயல்படும், தேசிய உணவு தொழில்நுட்ப வணிகம் மற்றும் மேலாண்மை கல்வி நிறுவனத்தில், இளநிலை, முதுநிலை மற்றும் ஆராய்ச்சி பட்டப்படிப்பில் மாணவர் சேர்க்கை அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

படிப்புகள்: பி.டெக்.,(புட் டெக்னாலஜி அண்ட் மேனேஜ்மெண்ட் ), எம்.டெக்.,(புட் டெக்னாலஜி அண்ட் மேனேஜ்மெண்ட், புட் புராசஸ் டெக்னாலஜி அண்ட் மேனேஜ்மெண்ட் , புட் சேப்டி அண்ட் குவாலிட்டி  மேனேஜ்மென்ட் , புட் சப்ளை அண்ட் செயின் மேனேஜ்மெண்ட் ),  எம்.பி.ஏ., மற்றும் பிஎச்.டி.,(அறிவியல், உணவு தொழில்நுட்பம்,மேலாண்மை மற்றும் சுற்றுச்சூழல்)

தகுதி: விண்ணப்பிக்கும் துறைக்கு ஏற்ற பிரிவில் இளநிலை மற்றும் முதுநிலை பட்டப்படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். ஜே.இ.இ., கேட், ஜே.ஆர்.எப்., நெட்., போன்ற ஏதேனும் ஒரு தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

சேர்க்கை முறை: நுழைவுத்தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் சேர்க்கை நடைபெறும்.

விண்ணப்பிக்க கடைசி நாள்: ஜூன் 30

விபரங்களுக்கு: http://niftem.ac.in

Search this Site

மேலும்

Copyright © 2018 www.kalvimalar.com.All rights reserved | Contact us