நிம்ஹான்ஸில் படிக்கலாம் | Kalvimalar - News

நிம்ஹான்ஸில் படிக்கலாம்

எழுத்தின் அளவு :

பெங்களூருவில் உள்ள நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆப் மென்டல் ஹெல்த் அண்ட் நியூரோ சயின்ஸ், கல்வி நிறுவனம் 2017ம் ஆண்டிற்கான மாணவர் சேர்க்கை அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

படிப்புகள்: பி.எஸ்சி., -நர்சிங், ரேடியோகிராபி மற்றும் மயக்க மருந்து தொழில்நுட்பம். டிப்ளமோ இன் கிளினிக்கல் நியூரோபிசியாலஜி டெக்னாலஜி, போஸ்டு பேசிக் டிப்ளமோ இன் மென்டல் ஹெல்த் நர்சிங், நியூரோ சயின்ஸ் நர்சிங் மற்றும் சான்றிதழ் படிப்புகள்.

கல்வித்தகுதி:  பிளஸ் 2வில், அறிவியல் பாடத்தை முதன்மை பாடமாக எடுத்து 45 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். டிப்ளமோ மற்றும் சான்றிதழ் படிப்புகளுக்கு ஏற்ப உரிய கல்வித் தகுதியை பெற்றிருப்பது அவசியம்.

சேர்க்கை முறை: ஆன்லைன் எழுத்து தேர்வில் பெறும் மதிப்பெண்கள் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடைபெறும்.

விண்ணப்பிக்க கடைசி நாள்: மே 31

விபரங்களுக்கு: www.nimhans.ac.in

Advertisement
Search this Site
dinamalar advertisement tariff

மேலும்

Copyright © 2024 www.kalvimalar.com.All rights reserved | Contact us